பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 தமிழ் நூல் அறிமுகம்

ஐயரவர்கள் இந்த நூலின் முன்னுரையில் எழுதியிருப் பவை தெரிந்து கொள்வதற்குரியவை :

"பகைவர் நாடுகளின் பழைய நிலையையும் பாழ்பட்ட பின்னர் அவை இருந்த நிலையையும் விரிவாக எடுத் துரைக்கும் செய்யுட்கள் பல இந்த நூலில் உள்ளன. அன்பும் அருளும் கல்வியும் மெய்ஞ்ஞானமும் நல்லொ. ழுக்கமும் ஒருங்கே அமைந்து குடிமக்களால் தெய்வமாக எண்ணப்படும் ஓர் அரசன், பகைவரைப் பொரும் விஷயத். தில் காலனைப் போன்று கடுஞ்சினத்தோடு சென்று போரிட்டு அவர்களின் வாழ்வையும் நாட்டையும் நாட்டு மக்களையும் சிதைத்துக் குலைத்து வெற்றிபெற்று அந்த வெற்றிக் களிப்பினால் தான் பெற்ற பொருளையெல்லாம் யாவருக்கும் வாரி வீசி மகிழ்கிறான். அரசியலில் குடி மக்களைப் பாதுகாக்கும் திறத்தில் அவன் செய்யும் செயல் கள் யாவும் சிந்தைக்கு இனிக்கின்றன. பகைவரைத் துன்புறுத்தும் திறத்தில் அவன் செய்யும் செயல்கள் உள்ளத்தையும் நடுங்கச் செய்கின்றன. போரினால் உண்டாகும் அழிவை அந்த அரசன் எண்ணி இரங்குவ தில்லை. புலவர்கள் மாத்திரம் அதனைக் கூறி இரங்கு. கின்றனர். அவர்களுடைய இரக்கம் பின்னும் அரசனது. பெருமிதத்தை வளர்க்க உதவுகிறதேயன்றிக் குறைக்கப் பயன்படுவதில்லை. உலகத்து மக்களுக்கு ஒரு செங்கோலை பிடிக்கும் கையினால் அந்த மக்களை அழிப்பதற்குக் காரணமாகும் மற்றொரு செங்கோலை (சிவந்த அம்பை)ப் பிடிப்பதை அரசன் பெருமையாகக் கொண்டது காலத்தின் இயல்பு: உலகத்தின் இயல்பென்றுகூடச் சோல்லி விடலாம்.' . . . . .

பதிற்றுப்பத்தில் சேர மன்னர்களின் வீரச் செயல்கள் பல வருகின்றன. அறிவும் வீரமும் நிறைந்த அவர்கள் கலைஞர்களையும் புலவர்களையும் ஆதரித்துப் பரிசு