பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. பதிற்றுப்பத்து 107

வழங்கினார்கள். குடிகளுக்குப் பல வகை நன்மைகளைச் செய்தார்கள். அவர்களுடைய ஈகைத் திறனைப்பற்றி உள்ள பகுதிகள் மிக்க நயமாக இருக்கின்றன. -

புலவர்களுக்கும் கலைஞர்களுக்கும் பலவகை உணவு களை மன்னர்கள் அருத்துவார்கள். அவர்கள் அணிந்த கந்தைத்துணி, மழை நீரில் நனைந்த பருந்தின் சிறகு போல இருக்கும்; மண்ணால் அரிக்கப்பட்டிருக்கும். அதை மாற்றிப் பட்டாடையை உடுத்துவார்கள். கர்ேப்படு பருந்தின் இறுஞ்சிறகு அன்ன கிலத்தின் சிதாஅர் களைந்த பின்றை நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ'

என்று புலவர் பாடுகிறார்.

(சிதாஅர்.கந்தை, நூலாக் கலிங்கம்-நூற்காத நூலால் அமைந்த பட்டாட்ை.1 -

அரசன் தன் நாட்டில் இரவலர் இல்லாமையால் வேறு நாட்டில் உள்ள இரவலரைத் தேரில் அழைத்து வந்து அவர்களுக்கு உணவை வழங்குவானாம்.

'வாரார் ஆயினும் இரவலர் வேண்டித்

தேரில் தந்து அவர்க்கு ஆர்பதன் கல்கும்’

என்று புலவர் பாடுகிறார்.

மகளிர் ಜೂ.14-ಹಿ. கோபமாகப் பார்த்த பார்வையைக் கண்டு அஞ்சுவதைவிட வறியவர்களுடைய துன்பத்தைக் கண்டு அஞ்சுவானாம். . -

"ஒண்ணுதல் மகளிர் துணிந்த கண்ணினும்

துனிததசினம் கொண்ட புன்கண்-துன்பம்)