பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 தமிழ் நூல் அறிமுகம்

கபிலர் செல்வக் கடுங்கோ வாழியாதனுடைய கொடைச் சிறப்பைப் பாடுகிறார். மிகவும் நயமாக அமைந்தது அது. .

சிலர் யாரேனும் இரவலர் வந்தால் பத்து ரூபாய் கொடுத்துவிடுவார்கள். பிறகு, அவ்வளவு கொடுத்திருக்க வேண்டாமே!" என்று எண்ணுவார்கள். வேறொருவன் அந்த மனிதருக்கு ஐந்து ரூபாய் கொடுத்ததாகச் சொன்னால், அடடா!நான் ஏமாந்து போய்விட்டேனே! நாமும் ஐந்து ரூபாய் கொடுத்திருக்கலாமே!” என்று. எண்ணியிரங்குவதும் உண்டு. சேரன் கொடுத்துவிட்டு, ஏன் கொடுத்தோமென்று வருத்தப்பட மாட்டானாம்.

'ஈத்தது இரங்கான்.' -

பிறருக்கு ஒன்றைக் கொடுத்தால் மகிழ்ச்சி உண்டாவது இயல்பு. அதைப் பிறரிடமும் சொல்வி உவகை அடைவது நமக்கு வழக்கம். ஆனால் சேரனோ எத்தனை முறை கொடுத்தாலும் அதற்காக மகிழ்ச்சி கொள்ள மாட்டானாம். இயல்பான காரியம் ஒன்றைச் செய்தது போல இருந்து விடுவானாம். நாம் நடக் கிறோம். அதனால் மகிழ்ச்சி அடைகிறோமா? அது இயல்பான காரியம். அவ்வாறே சேரன், கொடுத்ததை எண்ணி மகிழ்வதில்லையாம். -

'சத்தொறும் மகிழான்.'

இவற்றையெல்லாம் விடப் பெரிய வியப்பு ஒன்று உண்டு. ஓர் இரவலன் ஒரு வள்ளலிடம் கொடை பெற்றுச். செல்கிறான். அன்றே அவன் மறுபடியும் வந்தானானால், 'இப்போதுதானே நீ வந்து வாங்கிக் கொண்டு போனாய்?' என்று அவனை வள்ளல் கேட்பான். அப்படிக் கேட்பதும், இல்லையென்பதும் ஒன்றுதான் சேரனோ அப்படிச் செய்வதில்லையாம். ஒருவன் எத்தனை