பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. பரிபாடல்

தமிழில் உள்ள பாக்களை நூல் வகையாகப் பிரிப் பார்கள். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பவை அவை. நாற்கவிராசர், நாலுகவிப் பெருமாள் என்று புலவர்களைச் சிறப்பிப்பது வழக்கம். அதிலிருந்: தும் நான்கு வகையான பாக்கள் தலைமையானவை என்பதைத் தெரிந்து கொள்ளலாம், யாப்பிலக்கணங்களில் இந்த நாலுவகைப் பாக்களையும் இவற்றின் இனமாகிய தமிழிசை, துறை, விருத்தம் என்பவற்றையும் பற்றிய இலக்கணச் செய்திகள் உள்ளன.

ஆனால், தொல்காப்பியத்தில் பரிபாடல் என்ற ஒருவகைப் பாடலுக்குரிய இலக்கணம் சில சூத்திரங் களில் வருகின்றது. தலைச் சங்க காலத்தில் எத்தனையோ பரிபாடல்கள் வழங்கின என்று இறையனாரசுப் பொருளுரை கூறுகின்றது. அந்தக் காலத்தில் வழங்கின. வற்றில் ஒன்று கூடக் கிடைக்கவில்லை. தொல்காப்பியத் தில் மட்டும் பரிபாடலுக்கு இலக்கணம் இருக்கிற தேயன்றி, பிற யாப்பிலக்கண நூல்களில் அதற்கு இலக்கணம் இல்லை. எட்டுத் தொகையில் ஒன்றாகிய பரிபாடல் என்ற நூலில் எழுபது பாடல்கள் இருந்தன. அவற்றில் இப்போது இருபத்து நான்கு பாடல்களும், சில பாடல்களின் பகுதிகளுமே கிடைக்கின்றன. அந்த நூல்