பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. பரிபாடல் - 111.

களுக்குப் பின் பரிபாடலில் அமைந்த வேறு நூல்கள் தோன்றவே இல்லை. பிற்காலத்தில் தோன்றிய பாப்பா வினம்’ என்ற நூலில் பாக்களுக்கும் பாவினங்களுக்கும் எடுத்துக்காட்டாக உள்ள செய்யுட்களை இயற்றியமைத் திருக்கிறார் ஒரு புலவர். அதில் நான்கு பரிபாடல்கள் உள் ளன. - -

நாளடைவில் இலக்கியம் இல்லாமையால் இலக் கணமும் இல்லையாயிற்று. இதிலிருந்து பரிபாடல் என்ற கவிதை வடிவம் மிகப் பழமையானது என்பதை உணரலாம். -

எட்டுத் தொகையில் ஒன்றாகிய பரிபாடலில் திருமாலுக்கு எட்டுப் பாடல்களும், முருகனுக்கு முப்பத் தொரு பாடல்களும், கொற்றவையாகிய துர்க்கைக்கு ஒரு பாடலும், வையைக்கு இருபத்தாறும், மதுரைக்கு

நான்கும் இருந்தன என்று தெரிய வருகிறது. இப்போது 'கிடைப்பவற்றில் திருமாலுக்குரியவை ஏழு, முருகனுக் குரியவை எட்டு; வையைக்குரியவை ஒன்பது, இவற்றைக் கண்டு பிடித்து ஆராய்ந்து அச்சிட்டுத் தமிழுலகுக்கு வழங்கியவர்கள் மகாமகோபாத்தியாய ட க் டர் ஐயரவர்கள். இந்த நூலுக்குப் பரிமேலழகர் உரை எழுதியுள்ளார். - ...'

பரிபாடல் என்பது ஒரு வகை இசைப்பாட்டு; ஆதலின் ஒவ்வொரு பாட்டுக்கும் இராகம் உண்டு. பாடலைப் பாடிய புலவர் வேறு; அதற்கு இசையமைத்தவர் வேறு. ஒவ்வொரு பாட்டின் பின்னும் இவற்றைப் பற்றிய குறிப்பு கள் உள்ளன. . . . . . .

இரண்டாவது பாட்டின்கீழ் உள்ள குறிப்புக்கள் வருமாறு: