பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 தமிழ் நூல் அறிமுகம்

கடவுள் வாழ்த்து; கன்னாகனார் இசை, கீரக்தையார் பாட்டு: பண்ணுப்பாலை யாழ்.

பரிபாடல் 25 அடி முதலாக 400 அடி வரையில் வரும் என்பது இலக்கணம்.

இப்போது கிடைக்கும் பரிபாடலில் திருமாலைப் பற்றியும் முருகனைப்பற்றியும் பல பாடல்கள் இருப்ப தனால் சங்க காலத்துத் தமிழ் மக்களின் கடவுள் உணர்வு பற்றிய பல கருத்துக்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. வையை அந்தக் காலத்தில் நீரோட்டம் மிகுதியும் உடைய தாக இருந்தது. அதில் மக்கள் நீராடி மகிழ்ந்தார்கள். அந்த நீர் விளையாட்டைப் பற்றிய காட்சிகளையும் மதுரை மாநகர் மக்களின் நீராட்டு விழா ஆர்வத்தையும் இந்த நூலில் காணலாம். அகப்பொருள் துறை அமைந்த பாடல்களும் உள்ளன. -

திருமாவிருஞ்சோலை மலை, திருப்பரங்குன்றம்; இருந்தையூர் என்ற தலங்களைப்பற்றிய செய்திகள், சில பாடல்களில் வருகின்றன. அந்தக் காலத்து மக்கள் அந்தத் தலங்களில் உள்ள தெய்வங்களை வழிபடும் வகைகளையும் தெரிந்து கொள்ள இந்தப் பாடல்கள் உதவுகின்றன.

திருமாலைப் பற்றிய பல் புராண வரலாறுகளும் முருகனைப் பற்றிய பல கதைகளும் அந்தக் காலத்திலும் வழங்கி வந்தன. . . . -

திருமால் காமனுக்கும் பிரமனுக்கும் தந்தை; வராகக்கோலம் கொண்டு நிலத்தை வெள்ளத்தினின்றும் திருமால் மீட்டான்; சக்கராயுதத்தால் அவுணர்களை அழித்தான், தேவர்களுக்கு அமுதத்தைக் கடைந்து கொடுத்தான்; அவ ன் உந்திக் கமலத்தினின்றும்