பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. பரிபாடல் 113:

பிரமன் தோன்றினான்; மூவுலகத்தையும் அவன் அளந்தான்; கேசி என்னும் அசுரனை அழித்தான்;. மோகினியாக வந்து அமரர்களுக்கே அமுதம் அளித்தான்; ஆய்ச்சியரோடு கண்ணனாக நின்று குரல்ைக் கூத்தாடி னான்; பிரகலாதனுக்காகத் தூணிலிருந்து புறப்பட்டு இரணியனுடைய மார்பைப் பிளந்தான்; காத்தல் தொழிலை உடையவன்; ஆதிசேடன் மேல் அறிதுயில் செய்பவன்; பலராமனாகத் தோன்றினவன்; கருடனைக் கொடியாகவும் வாகனமாகவும் உடையவன்.

இப்படியே முருகனைப் பற்றிய பல செய்திகளும் வரலாறுகளும் வருகின்றன. முருகன் சூரபன்மனாகிய மாமரத்தையும் கிரவுஞ்ச மலையையும் தடிந்தவன்; பிணிமுகமென்னும் யானையின்மேல் எழுந்தருள்பவன்; ஆறு தலையுடனும் பன்னிரு தோள்களுடனும் தாமரைப் பூவில் தோன்றியவன்; சிவபெருமானுக்கு மகன்; சரவணப் பொய்கையில் கார்த்திகை மாதர்களுக்கு மகனாகத் தோன்றியவன்; வள்ளிநாயகியைக் களவின் கண் மணந்தவன்; இந்திரன் மகளாகிய தேவசேனையைத் திருமணம் புரிந்தவன் ; கடம்ப மரத்தில் எழுந்தருளி யிருப்பவன்; மயில் வாகனத்தையும் கோழிக் கொடியையும் உடையவன். .

ஓரிடத்தில் திருமாலை ஒன்று முதல் நூறாயிரங்கை வரையில் உள்ளவனாய்ப் பாடுகிறார்; கடுவன் இள எயினனார் என்னும் புவவர். ..

"நகைஅச் சாக கல்லமிர்து கலந்த

நடுவுநிலை திறம்பிய கயமில் ஒருகை;

இருகை மாஅல், .

முக்கை முனிவ, காற்கை அண்ணல்,

ஐங்கைம் மைந்த, அறுகை கெடுவேள்,