பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. பரிபாடல் 115

  • யாழ்னனக் கால்எனப் பாகென ஒன்றென

இரண்டென மூன்றென நான்கென ஐக்தென ஆறென ஏழென எட்டெனத் தொண்டென”. (பாழ்-பூஜ்யம். பாகு அரை தொண்டு-ஒன்பது) திருமாலின் வெப்பமும் ஒளியும் கதிரவனில் இருக் கின்றன. அவனுடைய தன்மையும் மென்மையும் சந்திரனில் உள்ளன. அவன் கொடுக்கக் கொடுக்க வளர்தலும் வண்மையும் மழையில் இருக்கின்றன. தாங்கும் ஆற்றலும் பொறுமையும் நிலத்தில் உள்ளன. மணமும் அழகும் காயாம்பூவில் இருக்கின்றன. அவன் வெளிப்படும் தன்மையும் பெருமையும் நீரில் உள்ளன. உருவமும் ஒலியும் ஆகாயத்தில் உள்ளன. அவன் அவ தரிப்பதும் மறைவதும் வாயுவில் உள்ளன. இப்படி

எல்லாப் பொருளும் அவனிடமிருந்து தன்மைகளைப் பெற்றன.

திருப்பரங்குன்றத்தில் ஓவிய மண்டபம் ஒன்று இருந்தது. அதை எழுதெழிலம்பலம் எ ன் று ம்; எழுத்து நிலை மண்டபம் என்றும் கூறுவர். அங்குள்ள ஒவியங்களைக் கோயிலுக்கு வருகிறவர்கள் கண்டு களிக்கிறார்கள். அங்கே இந்திரன் பூனையாக ஓடுவதும், அகலிகை கல்லாகப் போவதுமாகிய வரலாற் றைக் காட்டும் ஒவியங்களும் இருக்கின்றன. :இந்திரன் பூசை இவள்அகலிகை;இவன்

சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு ஒன்றிய படிஇது." : . (பூசை-பூனை? முருகனிடம் நேர்ந்துகொள்ளும் மக்கள் பலவகை ஆயினர். நல்ல கணவன் வேண்டும் என்போரும், வெளி பூருக்குச் சென்ற கணவன் இனிது திரும்ப வேண்டும்.