பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 16 தமிழ் நூல் அறிமுகம்

என்போரும், தமக்குக் கர்ப்பம் உண்டாக வேண்டும். என்போருமாகப் பல மகளிர் அங்கே முருகனை வழிபடு கிறார்கள். அங்குள்ள குரங்குகளுக்குத்தின்பண்டங்களைப் போடுகிறார்கள். கோயில் யானைக்குக் கவளம் கொடுத்து மிஞ்சியதைப் பிரசாதமாக உண்ணுகின்றனர். விளக்கு முதலியவற்றைக் காணிக்கையாகக் கொடுக்கிறார்கள்.

வையை வெள்ளத்தைக் கண்டு விழாக் கொண்டாடு கிறார்கள். பாவை நோன்பு நோற்கும் மகளிர் வையைக் குத் தாய்மாருடன் சென்று நீராடுகிறார்கள். அதை அம்பாவாடல் என்று பரிபாடல் குறிக்கிறது. -

புலவர்கள் திருமாலையும் முருகனையும் வாழ்த்தித் தம் வேண்டுகோளைக் கூறி முடிக்கின்றனர். எம். அறிவு வேறு ஒன்றையும் நினைக்காமல் மெய்யுணர் வுடையதாக இருக்கட்டும்' என்பது கீரந்தையார் கேட்கும் வரம். * . . . : .

முருகனைப் பாடிய கடுவன் இளவெயினனார் பாடுகிறார்: "யாங்கள் நின்னிடம் பொருளையும். பொன்னையும் போகத்தையும் இரக்கவில்லை. அருளும் அன்பும் அறமும் அருளுவாயாக!'

இறைவனை வழிபடுவதையன்றி வேறாகிய பயன் ஏதும் வேண்டாம்; அதுவே இன்பம்' என்று கொள்வது சிறந்த அடி யாருடைய இயல்பு. "கூடும் அன்பினிற். கும்பிடலேயன்றி, வீடும்வேண்டா விறலின்விளங்கினார்' என்று சேக்கிழார் பாடுகிறார். இந்த மனநிலை சங்க காலத்திலேயே இருந்திருக்கிறது. . . . . .

திருமாலைப் பாடிய o நல்லெழுநியார் பாட்டின்

இறுதியில்,