பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. பரிபாடல் 11?

"அன்னைஎன நினை.இ கின்அடி தொழுதனம்;

பன்மாண் அடுக்க இறைஞ்சினெம்; வாழ்த்தினெம்;

முன்னும் முன்னும்யாம் செய்தவப் பயத்தால்:

இன்னும் இன்னும்எம் காமம் இதுவே' என்று வேண்டுகிறார். பண்டும் பண்டும் யாம் செய்த தவத்தின் பயனால் முன்னே சொன்ன அந்தத் தன்மையை உடையாய் என்று உன்னை நினைத்து உன் திருவடியைத் தொழுது, பலமுறை அடுத்து அடுத்து இறைஞ்சி வாழ்த்தினோம். இவ்வாறே தொழுது இறைஞ்சி வாழ்த்துவதே நாங்கள் மேலும் மேலும் ஆசைப்படுகின்ற பொருள் என்பது இதன் கருத்து.

இப்படியே கேசவனார் என்னும் புலவர் முருகனை வேண்டுகிறார்:

"...அமர்ந்தியாம் நின்னைத்

துன்னித் துன்னி வழிபடு வதன்பயம்; இன்னும் இன்னும் அவை ஆகுக: தொன்முதிர் மரபின்கின் புகழினும் பலவே.' நின்னை விரும்பி நின்னிடம் அடுத்தடுத்து அணுகி வழிபடுவதற்குப் பயன், மீண்டும் மீண்டும் உன்னுடைய பழைய புகழ்களை விடப் பலவாக, நின்னை அவ்வாறு அணுகுதலும் வழிபடுவதும் உண்டாகட்டும்.1