பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. கலித்தொகை

எட்டுத் தொகை நூல்களில் ஆறு நூல்கள் ஆசிரியப் பாவால் அமைந்தவை. மற்ற இரண்டும் வெவ்வேறு பாக்களால் அமைந்தவை. அந்த இரண்டு நூல்களின் பெயரும் அவை இன்ன பாடல்களால் அமைந்தவை என்பதைப் புலப்படுத்தும்.ஒன்று பரிபாடல்; மற்றொன்று கவித்தொகை. கலிப்பாக்கள் அமைந்த தொகைநூல் ஆதலால் கலித்தொகை என்ற பெயர் வந்தது. தொகை நூல் என்பதைக் குறிக்கும் பெயர்கள் மூன்று நூல்களுக்கு அமைந்திருக்கின்றன. குறுந்தொகை, நெடுந்தொகை (அகநானூறு), கலித்தொகை. -

கலித்தொகை அகப்பொருள் அமைந்த நூல். முதலில் கடவுள் வாழ்த்தும் பிறகு ஐந்து திணைகளில் அமைந்த நூற்று நாற்பத்தொன்பது பாடல்களுமாக 150 பாடல்கள் உள்ள நூல் இது. கடவுள் வாழ்த்தைப் பாடியவர் நல்லந்துவனார். அதன்பின் அமைந்த பாலைத் திணைக்குரிய செய்யுட்கள் முப்பத்தைந்தையும் பாடியவர் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ. அடுத்துள்ள குறிஞ்சிக்கலியில் உள்ள 29 செய்யுட்களைப் பாடியவர் கபிலர். மூன்றாவதாகிய மருத திணையில் வரும் 35 பாக் களைப் பாடியவர் மருதன் இளநாகனார். நான்காவ தாகிய முல்லைக்கலியில் உள்ள 11 செய்யுட்களை இயற்றியவர் சோழன் நல் உருத்திரன். ஐந்தாவதாகிய