பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. கலித்தொகை 119

நெய்தற்கலியில் வரும் 33 செய்யுட்களை இயற்றியவர் நல்லந்துவனார். அவரே இந்தத் தொகை நூலைத் தொகுத்தவர் என்று தெரிகிறது. இந்த நூலுக்கு நச்சினார்க் கினியர் அழகிய உரை எழுதியிருக்கிறார். -

இதை முதலில் பதிப்பித்தவர் சி.வை.தாமோதரம் பிள்ளை. பிறகு திருத்தமான முறையில் பலவகைக் குறிப்பு களுடன் வெளியிட்டவர் இ. வை. அனந்தராமையர் அவர்கள். -

இன்பச் சுவை தரும் அகப்பொருளைச் சொல்வதற்குப் பரிபாடலும் கலிப்பாவும் உரியவை என்று தொல் காப்பியம் கூறுகிறது. காதற்காட்சிகளை விரிவாகப் பாடு வதற்கு இவ்விரண்டு வகைப் பாடல்களும் ஏற்றவை என்பது அதனால் தெரியவரும். நாடக் முறையில் வெவ் வேறு பாத்திரங்கள் மாறி மாறிப் பேசும்படி ஓசை மாற்றங்களுடன் அமைப்பதற்கு இந்த இரண்டு வகைச் செய்யுட்களும் மிகவும் நன்றாகப் பொருந்தியிருக்கின்றன.

கலித்தொகைப் பாடல் ஒவ்வொன்றும் ஓர் அழகிய நாடகக் காட்சிபோல அமைந்திருக்கும். பொதுவாக அகத்துறையமைந்த பாடல்கள் யாவும் காதலன், காதலி, தோழி, தாய், கண்டோர் முதலியவர்களில் யாரேனும் ஒருவர் கூற்றாகவே இருக்கும். கலித்தொகையில் அப்படி ஒருவர் கூற்றாகவே அமைந்துள்ள பாடல்களோடு.இருவர் மாறி மாறி உரையாடுவதாக அமைந்த பாடல்களும் உள்ளன. அந்தப் பாடல்கள் நாடகச்சுவை தருவனவாக இருப்பதைக் காணலாம். .

விரிவான அமைப்புடன் காதற் காட்சியைச் சித்தி

ரிக்கும் இயல்பு அமைந்திருப்பதனால் கலித்தொகையைப் புலவர்கள் விரும்பிப் பயிலுவார்கள். அதனால், கற்றறிந்: