பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 தமிழ் நூல் அறிமுகம்

தார் போற்றும் கலி' என்று இதனை ஒரு பாடல். சிறப்பித்துப் பேசுகின்றது. .

நாடக முறையில் உள்ள ஒரு பாட்டின் அமைப்பை , ל .#.a ,חובr 3 இங்கே பார்க்கலாம்.

காதலியை அவள் விரும்பிய காதலனுக்கு அவளுடைய பெற்றோர் மணம் புரிந்து தருவார்கள் என்ற உறுதி இல்லாமையால், அவன் அவளை யாரும் அறியாமல் அழைத்துச் சென்றுவிடுகிறான்.

மறுநாள் பெண்ணைப் பெற்ற தாயும் வளர்த்த செவிலித் தாயும் அவளைக் காணாமல் வருந்துகிறார்கள். அவள் தன் காதலனுடன் புறப்பட்டுப் போய்விட்டாள் என்பதை அறிகிறார்கள். அப்போது செவிலித்தாய், "நான் போய் அவளை அழைத்து வருகிறேன்' என்று. புறப்படுகிறாள். - - -

இந்தக் காட்சி பாலைத்திணையில் உடன்போக்கு. என்னும் பகுதியில் வருவது.

செவிலித்தாய் ஒன்றும் விளையாத ஒரு பொட்டல் காடாகிய பாலையின் வழியே போகிறாள். எதிரே சில துறவிகள்-முக்கோற் பகவர் என்று சொல்வார்கள்வருகிறார்கள். அவர்களைச் செவிலி கேட்கிறாள்;

ாவெயிலைத் தாங்கி ஏந்திய குடை நிழலில் உறியிலே வைத்த கமண்டலமும் திரிதண்டமும் தாங்கிக்கொண்டு வருகிற பெரியவர்களே! என் மகள் ஒருத்தியும் வேறு ஒருத்தியின் மகனும் தமக்குள்ளே இரகசியமாக ஒன்று பட்டவர்கள்; அவர்களை நீங்கள் வழியில் காண வில்லையோ' என்று கேட்கிறாள். அவர்கள் கூறும் விடை. வருமாறு: . . . ." -