பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 தமிழ் நூல் அறிமுகம்

என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும் தம்முளே புணர்ந்த தாம்அறி புணர்ச்சியர்; அன்னார் இருவரைக் காணிரோ? பெரும!’’ என்பது செவிலியின் கேள்வி.

'காணேம் அல்லேம்; கண்டனம் கடத்திடை,

ஆண்எழில் அண்ணலோடு அருஞ்சுரம் முன்னிய மாண்இழை மடவரல் தாயிர்நீர் போறிர்' என்று விடை கூறுகிறார் முக்கோற் பகவர். அதைக் கேட்ட செவிலிக்கு உயிர் வருகிறது. ஆனால் அடுத்தபடி பகவர் அந்தப் பெண் செய்தது சரி என்றும் அதுவே. அறத்தின் வழிப்பட்டது என்றும் சொல்கிறார்:

'பலவுறு கறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை

மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதாம் -

- என்செய்யும்? கினையுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு

- அனையளே.' இப்படியே முத்தையும் யாழிசையையும் உவமையாக எடுத்துக் காட்டுகிறார்: -

"சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை

நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்செய்யும்? தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே. ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை . யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என்செய்யும்? குழுங்கால் நும்மகள் நுமக்கு ஆங்கு அனையளே.' இவ்வாறு சொல்லிவிட்டு உணர்த்த வேண்டியதை, இறுதியில் உணர்த்துகிறார் முக்கோற் பகவர்:

'......என ஆங்கு.

இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்; சிறந்தானை வழிபடிஇச் சென்றனள், ! . அறக்தலை பிரியா ஆறும்மற்று அதுவே.