பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. கலித்தொகை 123

இப்படி உள்ள காட்சிகளை ஐந்து திணைப் பாடல் களிலும் காணலாம். முல்லைத் திணையில் ஏறு தழுவும் காட்சிகள் விரிவாக வருகின்றன.

கடவுள் வாழ்த்தில், இறைவன் பலவகை நடனங் களை ஆட அம்பிகை அருகிருந்து தாளம் கொட்டு கிறாள் என்ற செய்தி வருகிறது. ஆடல்வல்லானைப் பற்றிய செய்தியை அந்தப் பழங்காலத்திலேயே தமிழர் கள் அறிந்திருந்தார்கள் என்பதை இதனால் உணரலாம். ஒரு பாட்டில், துரியோதனனுடைய சூழ்ச்சியால் பஞ்ச பாண்டவர்கள் அரக்கு மாளிகையில் அகப்பட்டதும், அது தீப்பற்றி எரிய அதிலிருந்து வீமன் யாவரையும் மீட்டதுமாகிய வரலாறு உவமையாக வருகிறது. இரா வணன் கைலை மலையை எடுத்ததையும், இறைவன், காலால் அமிழ்த்த, அவன் நசுங்கி அலறியதையும் ஒரு பாட்டில் உவமையாக ஆள்கிறார் ஒரு புலவர்.

மாதர் தம் மைந்தரைக் கோயிலுக்கு அழைத்துச் சென்று வலம் சுற்றி வரும்படி தம் தோழிமாரை அனுப்பும் வழக்கத்தைச் சில பாடல்கள் சொல்லு கின்றன. ஈகை, வீரம் ஆகியவற்றைப் பற்றியும் வேறு பண்புகளைப்பற்றியும் அரிய கருத்துக்கள் பல அங்கங்கே ஒளிவிடுகின்றன.

இரவிலே மரங்கள் தலைசாய்ந்து நிற்கின்றன. இதற்குத் தம் புகழ் கேட்ட சான்றோர்கள் நாணித் தலை கவிழ்வதை உவமையாக்குகிறார் ஒரு புலவர். நாட்டார்க் குத் தோற்றலை நாணாதான் என்று நட்பின் திறத்தைச் சிறப்பிக்கிறார் ஒரு புலவர். பிறர் நோயும் தம் நோய் போற் போற்றும் பெருந்தகைமையை ஒரிடத்தில் புலவர் எடுத் துக்காட்டுகிறார்.