பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. அகநானூறு

அவள் மெல்ல அங்கே வந்து நின்றாள். அவள் கால் கட்டை விரல் நிலத்தைக் கீறியது. அவள் முகத்தில் புன்னகை தோன்றியது. ஆனால் அது உண்மையான புன்னகை அன்று. அவள் தன் இடுப்பில் குழந்தையை வைத்திருந்தாள். அவனுடைய தலையில் பூமாலையைச் சூட்டியிருந்தாள்.

பொய்யான புன்னகையோடு வந்து நின்ற தன் அன்புக்குரியவளைப் பார்த்தான் கணவன். அவன் வெளிநாட்டுக்குச் சென்று பணம் சம்பாதித்துக்கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தான் அதற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்து விட்டான். ஆனால் அந்தச் செய்தியைத் தன் மனைவிக்கு அவன் வாயால் சொல்லவில்லை. இப்போது சொல்லி விடை பெற வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு அவள் வரவை எதிர்பார்த்திருந்தான். ;

அவள் வந்து முன்னே நின்றாள். அவளுக்கு அவனுடைய கருத்துத் தெரியும். ஆனாலும் அதைத் தெரிந்து கொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. போக வேண்டாம்' என்று சொல்ல எண்ணந்தான். 'நீங்கள் போகும் வழி மிகவும் கடுமையான வழி ஆயிற்றே! மரங்கள் கரிந்து போன வழி. கற்கள் விரல்