பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. அகநானூறு 12?

'இப்போதைக்குப் போக வேண்டாம் என்று தீர்மானித்தான். -

இதை, காதல் நிரம்பிய அந்த ஆடவன் சொல் கிறான். - -

சபாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு

ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன்தலைத் தூநீர் பயந்த துணையமை பிணையல் மோயினள் உயிர்த்த காலை, மாமலர் மணிஉரு இழந்த அணியழி தோற்றம் கண்டே கடிந்தனம் செலவே ஒண்டொடி உழையம் ஆகவும் இனைவோள் பிழையலள் மாதோ பிரிதும்நாம் எனினே.”

'கண்மணிப் பாவையை மறைத்த குளிர்ந்த நீரை யுடைய கண்ணோடு மார்பிலே அணைத்த புதல்வனுடைய சிவந்த தலையில் தூய நீரிலே விளைந்த இரட்டையாகக் கட்டிய பூமாலையை மோந்து பெருமூச்சு விட்டபோது, அந்த அழகிய மலர் நீலமணி போன்ற நிறத்தை இழந்து அழகு அழிந்த தோற்றத்தைக் கண்டு ஒளிமிக்க வளையலை அணிந்த இவள், நாம் அருகில் இருக்கும் போதே வருந்துகிறவள், நாம் பிரிந்து போனால் பிழைத் திருக்க மாட்டாள்" என்று எண்ணி வெளிநாடு போவதை நிறுத்திவிட்டோம்' என்பது இதன் பொருள்.

நுட்பமான உணர்வைக் காட்டும் இந்தக் காட்சி அகநானூற்றில் ஒரு பாட்டில் வருகிறது. இவ்வாறு காதல் உலகத்தில் நிகழும் காட்சிகளைச் சொல்லோவிய மாகக் காட்டும் 400 பாடல்கள் அடங்கியது அகநானூறு என்ற தொகை நூல். முதலில் உள்ள கடவுள் வாழ்த். தோடு 401 பாடல்களை உடையது இந்த நூல்.