பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 . தமிழ் நூல் அறிமுகம்

இதற்கு நெடுந்தொகை என்றும் ஒரு பெயர் உண்டு. குறுந்தொகையில் உள்ள பாடல்கள் மிகச் சில அடிகளை உடையவை. அவற்ற்ைவிடச் சற்றுப் பெரிய பாடல்களை உடையது நற்றிணை. அந்தப் பாடல்களைவிட அதிகமான அடிகளை உடையவை இந்த நூலில் இருப்பதால் இதற்கு நெடுந்தொகை என்ற பெயர் வந்தது. 13 அடி முதல் 31 அடி வரையில் உள்ள பாடல்களை இந்தத் தொகை நூலிற் காணலாம்.

இந்த நூலைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திர சன்மர். தொகுக்கும்படி செய்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி.

கடவுள் வாழ்த்தைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். 145 புலவர்கள் பாடியவை இதில் உள்ள பாடல்கள். மூன்று பாடல்களுக்கு ஆசிரியர் இன்னார் என்று தெரியவில்லை. -

அகத்துறை அமைந்த நானூறு பாடல்களையும் மூன்று பெரும் பகுதிகளாகப் பிரித்து அமைத்திருக் கிறார்கள். முதல் 120 பாடல்கள் களிற்றியானை நிரை என்னும் பகுதி; 121-ஆம் பாடல் முதல் 800 வரை உள்ளது மணிமிடை பவளம்; கடைசி 100 பாடல்கள் நித்திலக்கோவை என்ற பகுதியாக அமைந்தவை. இவ்வாறு பெயரிட்டுப் பிரித்ததற்குக் காரணம் இன்ன தென்று தெளிவாக விளங்க வில்லை.

அகத்துறைப் பாடல்களில் ஒவ்வொன்றுக்கும் திணை உண்டு. குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்து திணைகளில் இப்பாடல்கள் அமைந்திருக் கும். அகநானூற்றில் ஒரு வரையறையாகத் திணைப். பாடல்கள் கோக்கப் பெற்றிருக்கின்றன.பாலைத் திணைப் பாடல்களே மிகுதி. ஒற்றைப்படை எண்களை உடைய