பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. அகநானூறு - 129,

பாடல்கள் எல்லாம் அந்தத் திணையைச் சேர்ந்தன. இரண்டு எட்டு என்று வரும் பாடல்கள் (2, 8, 12, 18, 22, 28, 32; 38, என்று வருபவை போன்றன) குறிஞ்சித் திணையைச் சார்ந்தவை. நான்கு என்னும் எண்களை உடையவை (4, 14, 24, 84, 44 போன்றவை) முல்லைத் திணைப் பாடல்கள். ஆறு என்ற எண்ணாக உள்ளவை மருதத் திணைக்குரியவை. 10, 20, 30 எனவரும் பத்தென்னும் எண் வகைகளை உடையவை நெய்தல் திணைக்கு உரியவை. ஆகவே பாலைத் திணைப் பாடல்கள் இருநூறும், குறிஞ்சித் திணைப் பாடல்கள் எண்பதும், மற்றத் திணைகளில் ஒவ்வொன்றிலும் நாற்பது பாடல் களும் இருக்கின்றன. இத்தகைய வரையறை வேறு எந்த நூலிலும் இல்லை. * * -

இந்த நூலில் முதல் தொண்ணுாறு பாடல்களுக்கு பழைய உரை உண்டு. இந்த நூலைச் சேது சம்ஸ்தான மகாவித்துவான் ரா. இராகவையங்காரைக் கொண்டு இராசகோபாலையங்கார் என்பவர் முதல் முதலில் வெளி யிட்டார் . - - .

நெடும் பாடல்களாக அமைந்திருப்பதால் செய்தி களை விரிவாகச் சொல்ல இடம் உண்டு. எனவே, இந்த நூவில் உள்ள் பாடல்களில் இயற்கை வருணனை மிக விரிவாக இருக்கும். துறைக்குரிய நிகழ்ச்சியும் விரிவாகப் பொருந்தியிருக்கும்.

சிவபெருமான் வேத்த்தைச் சொன்னவர். வேதத் தின் ஆசிரியராகிய அவரே அதை எப்போதும் சொல்லிக் கொண்டேயிருக்கிறாராம். மறைப்பாட்டைப் பாடுதலால் அவருடைய கண்டம் யாழைப் போல இருக்கிறது. ஆதலின் அவரை, யாழ்கெழு மணிமிடற் றந்தணன்'