பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

is 30 தமிழ் நூல் அறிமுகம்

என்று கடவுள் வாழ்த்தில் பெருந்தேவனார் பாடுகிறார். வேதத்தை அநாதி என்று சொல்வர். அநாதியாக உள்ள இறைவன் எப்போதும் பாடிக் கொண்டிருப்ப தால் அதுவும் அநாதியாக இருக்கிறது. இந்தக் குறிப்பை

அந்தத் தொடர் காட்டுகிறது. -

தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள காதலுறவு, * இருதலைப் புள்ளுக்குத் தலையிரண்டாகவும் உயிர் ஒன்றாகவும் இருப்பது போன்றது என்று ஒரு பாட்டுக் கூறுகிறது. .

இருதலைப் புள்ளின் ஓர்உயிரம்மே."

இப்போது பழனி என்று வழங்கும் முருகனுடைய திருத்தலத்துக்குப் பழங்காலத்தில் பொதினி என்பது பெவர். அந்த மலைக்குரிய அரசர்கள் ஆவியர் குலத்தில் தோன்றினவர்கள். அவர்கள் வாழும் இடம் ஆதலின் ஊருக்கு ஆவிநன்குடி என்ற பெயர் வழங்குகிறது. -

அகநானூற்றில்ஒரு பாட்டில், முைழவுறழ் திணிதோள் நெடுவேள் ஆவி

பொன்னுடை நெடுநகர்ப் பொதினி'

என்று வருகிறது. வேள் என்பது குறுநில மன்ன னுக்குப் பெயர். இக்காலத்துப் பாளையக்காரர் அல்லது ஜமீன்தாரைப் போன்றவன். பேகன் என்னும் வள்ளல் இந்த ஆவியர் குலத்தில் தோன்றினவன். நகர் என்பது கோயிலைக் குறிக்கும் சொல். 'பொன்னை உடைய உயர்ந்த கோயிலை உடைய பொதினி என்று பொருள் செய்ய வேண்டும். இதனால் அக்காலத்திலேயே பழனி மலையின்மீது கோயில் இருந்தது என்று தெரியவரும்.

இராமன் கடலில் அணை கட்டியபோது ஒரிடத்தில் இரு ந் து மற்றவர்களுடன் மந்திராலோசனை செய்தானாம். அவன் தங்கியிருந்தது ஒர் ஆலமரத்தின்