பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. அகநானூறு 131

நிழல். அந்த மரத்தின் மேல் இருந்த பறவைகள் குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. இராமன் தன் மந்திரா லோசனைக்கு அந்த ஒலி இடையூறாக இருப்பதை அறிந்து கையை உயர்த்தி, குரல் எழுப்பாமல் இருங்கள்" என்று சொல்லவே, பறவைகள் ஒலியடங்கி இருந்தனவாம். இந்த இடத்தை ஏகாந்த ராமம் என்பார்கள். இந்த வரலாற்றை ஒரு பாடல் கூறும். -

வென்வேற் கவுரியர் தொன்முது கோடி

முழங்குஇரும் பெளவம் இரங்கும் முன்துறை வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த பல்வீழ் ஆலம் போல ஒலிஅவிங் தன்றுஇவ் வழுங்கல் ஊரே.'

(கவுரியர்-பாண்டியர்; கோடி-தனுக்கோடி; பெளவம்கடல்; மறைக்கு-இரகசிய ஆலோசனையின் பொருட்டு; அவித்த-அடங்கச் செய்த; வீழ்-விழுது; அவிந்தன்றுஅடங்கியது; அழுங்கல் ஊர்-ஆரவாரத்தை உடைய ஊர்.)

பழங்காலத்தில் ஆவண ஒலைகளைப் பானைகளில் வைத்து மேலே மூடி முத்திரையிட்டுப் பாதுகாப்பார்கள். ஆவணங்களைப் பாதுகாக்கும் இடத்துக்கு ஆவணக்களரி என்று பெயர். கல்வெட்டுக்களில் இந்தப் பெயர் இருக்கும். சங்க காலத்திலேயே ஆவண ஒலைகளைப் பானைகளில் இட்டுப் பாதுகாத்து வேண்டும்போது முத்திரையை நீக்கி ஒலையை எடுத்துப் பார்த்து வந்தார்கள். இந்தச் செய்தியை அகநானூற்றுப் பாடல் ஒன்று உவமையாக எடுத்துச் சொல்கிறது.

பாலை நிலத்தில் போரிட்டு வீழ்ந்த வீரர்களின் உடலிலிருந்து கழுகுகள் குடலைக் குத்தி இழுக்கின்றன. கயிற்றால் வாய்மூடிக் கட்டப் பெற்ற பானையிலிருந்து அடையாள முத்திரையைப் பார்த்து நீக்கி, ஒலையை