பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. புறநானூறு

நூறு ஆண்டுக்குமுன் ஒரு தமிழ்ப் புலவர் சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரத்தைப் படித்துக்கொண் டிருந்தார்.

கொடுக்கிலா தானைப் பாரியே என்று

கூறினும் கொடுப்பார் இலை'

என்ற பகுதியைப் பிடிக்கும்போது பாரி என்பவன் ஒரு வள்ளல் என்று தெரிந்துகொண்டார். 'மக்களைப் பாட வேண்டாம்; இறைவனைப் பாடுங்கள்' என்று சுந்தரர் பாடும் பதிகம் அது. அதில் தம்மை அறியாமலே பாரியின் பெருமையை மறைமுகமாகப் பாராட்டியிருக் கிறார் அந்தப் பெருமான். அப்படியானால் அந்த வள்ளல் மிகச் சிறந்தவனாகத்தான் இருக்கவேண்டும் என்று ஊகித்துச் கொண்டார் புலவர். நிகண்டுகளைப் படித் திருந்த புலவர் கடை ஏழு வள்ளல்களில் ஒருவன் பாரி என்று மட்டும் தெரிந்துகொண்டிருந்தார். பாரி, ஓரி, மலையன், அதிகமான், பேகன், ஆய், நள்ளி என்ற அந்த எழுவரின் பெயர்களும் அவருக்குத் தெரியும். ஆனால், அவர்கள் யார்? அவர்களுடைய வள்ளன்மையைப் புலப்படுத்தும் செயல்கள் எவை? என்று புலவருக்குத் தெரியாது அவருக்கு மட்டுமா? மற்றப் புலவர்களுக்கும் தெரியாது.

த-9