பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 தமிழ் நூல் அறிமுகம்

ஆனால் இன்று பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணாக்கனை அணுகி, 'தம்பி, உனக்குப் பாரி யைப்பற்றி ஏதாவது தெரியுமா?’ என்று கேட்டுப் பாருங்கள். அவன் உடனே, “தெரியுமே; அவன் பறம்பு மலையில் வாழ்ந்தவன்; முல்லைக்குத் தேர் ஈந்தவன்; கபில ரென்னும் பெரிய புலவருக்கு உயிர் நண்பன்' என்று சொல்லுவான். அப்படியே மற்ற வள்ளல்களைப் பற்றியும் சொல்லுவான். -

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டு அரசியல் வாழ்வு எப்படி இருந்தது? எந்த எந்த அரசர்கள் சிறப்புற்று வாழ்ந்தார்கள்? என்ன என்ன போர்கள் நிகழ்ந்தன? புலவர்களுடைய பெருமை எவ்வாறு இருந்தது?-இத்தகைய வினாக்களுக்குரிய விடைகளை இக்காலத்துப் புலவர்கள் நன்கு அறிந்திருக் கிறார்கள்.

முதுகுடுமிப் பெருவழுதி என்பவன் பல வேள்வி கண்ளச்செய்தவன். பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்ற சேர அரசன் பாரதப் போர்வீரர்களுக்கு அரிசி அனுப்பினான். அதிகமான் ஒளவையாருக்கு நெடுநாள் வாழும் உரத்தைத் தரும் தெல்லிக் கனியைத் தந்தான், குமணன் தன்னை நாடி வந்த புலவனுக்குத் தன்னுடைய தலையையே வழங்க முன் வந்தான், கோவூர் கிழார் போர் செய்யும் மன்னர்களுக்கு அறிவுரை கூறிச் சமாதா னத்தை உண்டு பண்ணின்ார். முடியுடை மூவேந்தர் களும் முற்றுகையிட்டும் பாரி தன் மலையில் விளையும் உணவுப் பண்டங்களை வீரர்களுக்கு வழங்கி அந்த முற்றுகையினால் ஊறு அடையாமல் இருந்தான் என்ற வரலாற்றுச் செய்திகளைத் தமிழ் மாணவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். - 、 、 : : 「一