பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. புறநானூறு 135

சயாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற அருமை யான தொடர் உலகம் முழுவதும் ஒலிக்கிறது; தமிழ் மக்களின் விரிந்த மனநிலையையும் பண்பாட்டையும் அது காட்டுகிறது.

இவ்வளவுக்கும் முக்கிய காரணமாக இருக்கும் நூல் புறநானூறு அந்த நூல் முழுவதும் வரலாற்றுக் களஞ்சியம். புலவர்கள், புரவலர்கள் ஆகியவர்களின் இயல்பைக் காட்டும் கண்ணாடி. தமிழ் மக்களின் புற வாழ்க்கையையும் அக வாழ்க்கையையும் தெரிந்து கொள்ள உதவும் வழிகாட்டி. பல சுவையான நிகழ்ச்சி களைக் காட்டும் கருவூலம்.

எட்டுத்தொகையில் ஒன்றாக இருப்பது புறநானூறு. கடவுள் வாழ்த்தை முதற்பாட்டாக உடையது. அதையும் சேர்த்து நானூறு பாடல்கள் உடையது. புறம், புறப் பாட்டு, புறம்பு நானுாறு என்றும் இந்தத் தொகைக்குப் பெயர் உண்டு.

இதைத் தேடி எடுத்து ஆராய்ந்து பதிப்பித்து உதவி யவர்கள் டாக்டர் உ.வே. சாமிநாதையரவர்கள். இரண்டு பாடல்கள் கிடைக்கவில்லை. இதற்கு ஒரு பழைய உரை உண்டு. ஆனால் முதல் 266 பாடல்களுக்கு மட்டுமே இருக்கிறது.

புறப்பொருள் பற்றிய பாடல்கள் ஆதலின் ஒவ் வொரு பாட்டுக்குப் பின்னும் அதற்குரிய திணை, துறை இன்னவை என்ற குறிப்பும், இன்னாரை இதன் பொருட் டுப் பாடியது என்ற குறிப்பும் உள்ளன. உதாரணமாக, 65-ஆம் பாட்டுக்குப் பின், 'திணை-பொதுவியல்; துறை கையறுநிலை; சேரமான் பெருஞ்சேரலாதன் சோழன் கரிகாற் பெருவளத்தானோடு பொருது புறப்புண் நாணி வடக்கிருந்தானைக் கழாத்தலையார் பாடியது' என்ற