பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 தமிழ் நூல், அறிமுகம்

குறிப்பு இருக்கிறது. இதிலிருந்து ஒரு முக்கியமான வரலாற்றுச் செய்தி தெரிய வருகிறது. -

இந்த நூலைத் தொகுத்தவர் இன்னார் என்றும், தொகுப்பித்தோர் இன்னாரென்றும் தெரியவில்லை.

வரலாற்றுச் செய்திகளைத் தரும் பாடல்களானாலும் சிறந்த கவிதைகளாகவும் இவை இருக்கின்றன. புலவர்கள் ஆகியோரின் வாழ்க்கையோடு தொடர்புடை யவை ஆதலின் பாடல்களில் உணர்ச்சியும் உயிரும் துள்ளுகின்றன. - -

கடவுள் வாழ்த்தில் பாரதம் பாடிய பெருந்தேவனார். சிவபெருமானுடைய புகழைக் கூறுகிறார். சிவபெருமா டைய ஒரு கூற்றில் அம்பிகை இருக்கிறாள். அந்தக். கோலத்தை மாதிருக்கும் பாதியன் என்கிறோம். படைப் புக் காலத்தில் சிவபெருமான் முதலில் இந்தத் தோற் றத்தை மேற்கொள்கிறான். சக்தியை ஒரு பாதியில் மலரச் செய்கிறான். ஆனால் சங்கார காலத்தில் சக்தியும் சிவபெருமானுக்குள் அடங்கிவிடுவாள். இதைச் சைவ நூல்கள் கூறுகின்றன. இந்தக் கருத்தைப் பெருந் தேவனார் சொல்கிறார்:

பெண் உரு ஒருதிறன் ஆகின்று: அவ்வுருத்' தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் ' பெண் உருவம் ஒரு பக்கம் இருக்கிறது. ஆனால் ஒரு காலத்தில் அந்த உருவத்தைத் தனக்குள்ளே அடக்கி, மறைக்கவும் மறைப்பான்’ என்பது இதன் பொருள்.

Guirft புரிவதற்கு முன்னால், பகைவர் நாட்டி லுள்ள பசுமாடுகளுக்கும் அந்தணர் முதலியோருக்கும் தீங்கு நேராமல் இருப்பதற்காக அவர்களை, "பாதுகாப்பான