பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. புறநானு று 127

இடங்களுக்குப் போய்விடுங்கள்' என்று முரசறைந்து தெரிவிப்பார்களாம்:

"ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்

பெண்டிரும் பிணியுடை விரும் பேணித் தென்புல வாழ்கர்க்கு அருங்கடன் இருக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம் அம்பு கடிவிடுதும், நும் அரண் சேர்மின் என அறத்தாறு துவலும் பூட்கை மறம்.”

'பசு மாடுகளும், பசுவின் தன்மையையுடைய அந்தணர்களும், பெண்களும், நோயாளிகளும், பி திரர் களுக்குக் கடன் கழிக்கும் பிள்ளைகளைப் பெறாதவர் களும், 'உங்களுக்குப் பாதுகாப்பான இடங்களைச் சேர்ந்துவிடுங்கள். நாங்கள் விரைவில் அம்பை எய்து போர் செய்யப்போகிறோம்' என்று அறநெறியில்

அறையும் மேற்கோளையுடைய வீரம்.)

தர்மயுத்தம் என்று சொல்வது இதுதான். நெட்டி மையார் என்ற புலவர், பாண்டியன் பல்யாகசாலை முது குடுமிப்பெருவழுதியைப் பாடும் பொழுது (9-ஆம் பாட்டு இப்படிச் சொல்கிறார். -

இந்தியாவின் ஒருமைப்பாட்டை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். "தெற்கேயுள்ள கன்யாகுமரி, வடக்கேயுள்ள பெரிய மலையாகியஇமயமலை, கிழக்கிலும் மேற்கிலும் கடல்கள் ஆகியவற்றை எல்லையாகவுடைய குன்றும் மலையும் காடும் நாடும் அடங்கிய இந்தப் பெரிய நாட்டிலுள்ள யாவரும் ஒருங்குபட்டு வழிபாடு கூறத் திய செயல்களை யெல்லாம் போக்கிச் செங்கோல் ஒச்சிய வன்' என்று ஒரு புலவர் பாடுவதில் இந்த ஒருமைப்பாட் டைக் காண்கிறோம். அவருடைய சொற்களிலேயே அதைக் கேளுங்கள்! - . . . -