பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 தமிழ் நூல் அறிமுகம்

தென்குமரி வடபெருங்கல்

குணகுட கடலாஎல்லை குன்றுமலை காடுகாடு ஒன்றுபட்டு வழிமொழியக் கொடிது கடிந்து கோல்திருத்தி.'

அரசர்களுக்குப் புலவர்கள் அறிவுரை கூறித் திருத்திய நிகழ்ச்சிகள் பல. நீர் நிலைகளை உண்டாக்கி வயல்களுக்கு நீர் பாயச் செய்து உணவுப் பொருளை மிகுதி யாக விளையும்படி செய்ய வேண்டியது அரசனுடைய கடமை. இதையே நயமாகப் பாண்டியன் நெடுஞ் செழியன் என்ற அரசனுக்குக் குடபுலவியனார் என்ற புலவர் சொல்கிறார். ..

'போகிற உலகத்தில் வாழ்வதற்குரிய செல்வம் வேண்டினாலும், இந்த உலகத்தில் வெற்றியுடன் வாழ: வேண்டினாலும், புகழை நிலைநிறுத்த வேண்டினாலும் அதற்குத் தக்க செயல் இன்னதென்று சொல்கிறேன். கேள்' என்று தொடங்குகிறார் புலவர். -

'உடம்புக்கு நீர் வேண்டும். உணவு வேண்டும். உணவினால்தான் உடம்பில் உயிர் நிற்கிறது. ஆகையால் உணவைக் கொடுப்பவர் உயிரையே கொடுத்தவர் ஆவார்' என்று சொல்கிறார்:

'உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே' என்ற அடி இங்கே வருகிறது. -

- மேலே, உணவு எப்படி உண்டாகிறது. என்று. சொல்லி, நீரும் நிலமும் இணைந்தால் உணவுப்பொருள் விளையும் என்று எடுத்துக் காட்டுகிறார். "வானம் பார்க் கும் பூமி இருந்தால் அதனால் பெரும்பயன் விளையாது: நம்முடைய விருப்பப்படி நீரைப் பாய்ச்சிப் பயிர் விளைக்