பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. புறநானூறு . 139

கும்படி இருந்தால்தான் அரசனுடைய முயற்சிகள் பயனைத் தரும்' என்று சொல்லிவிட்டு, ஆகையால் நீ நீரைத் தேக்கி வைக்கும் முயற்சிகளைச் செய்யவேண்டும்' என்று முடிக்கிறார். அதைப் பொதுவகையில்சொல்கிறார். 'நிலம் பள்ளமாகும் இடத்திலே நீர் நிலை பெருகும்படி அணை முதலியவை கட்டித் தேக்கியவர்கள், இவ்வுலகத் தில் புகழைத் தேக்கியவர்கள், அல்லாதவர்கள் தம் பெயரை நிலைநிறுத்த முடியாதவர்கள்' என்கிறார்.

"நிலன்கெளி மருங்கின் நீர்நிலை பெருகத்

தட்டோர் அம்ம இவண்தட் டோரே; தள்ளா தோர் இவண் தள்ளா தோரே...'

|தட்டோர். தடுத்தவர் , தேக்கியவர்; தள்ளாதோர். தேக்காதவர்) -

வீரத்தைப் பற்றியும் ஈகையைப் பற்றியும் உள்ள அற்புதமான பாடல்கள் மிகவும் பெருமைப்படுவதற் குரியவை. பெண்டிரும் வீரம் காட்டிய நிகழ்ச்சிகள் பல இருக்கின்றன. ஈகையைப் பற்றிய நுட்பமான கருத்துக் களை இவ்வளவு சிறப்பாகச் சொல்லும் நூல்கள் உலகத் திலேயே மிகச் சிலவாகத்தான் இருக்க முடியும்.

ஒரு புலவர் இழிந்தது, மிக இழிந்தது. உயர்ந்தது, மிக உயர்ந்தது என்று நான்கைச் சொல்கிறார். அந்த நான்கும் ஈகையோடு தொடர்புடைய கருத்துக்கள்.

இறைவன் முயற்சி செய்வதற்குரிய கருவி கரணங் களை நமக்குக் கொடுத்திருக்கிறான். அவற்றைக் கொண்டு நாம் உழைக்கவேண்டும்; முயற்சி செய்து நமக்கு வேண் டியதை நாம் ஈட்டிக்கொள்ள வேண்டும். அப்படியின்றிப் பிறரிடம் கைநீட்டி ஒன்றை வாங்குவதென்பது இழிந்த செயல். ஈ என்பதற்குக் கொடு என்பது பொருள்.