பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 தமிழ் நூல் அறிமுகம்

அந்தச் சொல்லைச் சொல்லும் போதே நாம் பல்லை இளிக்க வேண்டியிருக்கிறது. எத்தனை அவமானம்!

என இரத்தல் இழிந்தன்று." இழிந்தன்று-இழிந்தது.1

செல்வம் படைத்தவன் அதனைத் தானே பயன்படுத் திக்கொண்டு வாழ்தல் அறம் அன்று. 'செல்வத்துப் பயனே ஈதல்' என்று ஒரு புலவர் சொல்வார். துன்பப் படுபவர்களின் நிலையை அறிந்து தானே வலியச் சென்று கொஇப்பதுதான் உத்தமமான ஈகை. ஒருவன் மானத்தை விட்டு நம்மிடம் வந்து, 'ஈ' என்று கேட்கும் போது கொடுக்காமல் இருப்பது, அவ்வாறு கேட்பதைவிட இழிவானது. .

"அதன் எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று.” இழிந்ததையும் மிக இழிந்ததையும் சொன்ன புலவர், மேலே, உயர்ந்ததையும் மிக உயர்ந்ததையும் சொல்ல வருகிறார். - ஒருவர் வறுமையால் வருந்துவதை அறிந்து அவர் கேளாமல் இருந்தாலும் அவர் நிலைக்கு இரங்கி வலியச் சென்று ஈதல் சிறந்த பண்பு. -

கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று' (உயர்ந்தன்று உயர்ந்தது. - அதைவிட உயர்ந்தது எது தெரியுமா? அப்படி - ஒருவன் கொடுக்கும்போது, "வேண்டாம்; எனக்கு வேண்டியதை நானே ஈட்டுவேன்' என்று சொல்கிறானே, அவன் பின்னும் உயர்ந்தவன். . i

"அதன் எதிர். . கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று.'