பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 புறநானூறு 141

கொடுக்கிறவனை விட அதை வேண்டாம் என்று மறுக்கிறவன் மானம் நிறைந்தவன். மானம் உயிரை விடச் சிறந்ததல்லவா?

இந்த நான்கையும் சேர்த்துப் பார்த்தால், இந்த வரிகளுக்கு அட்சரலட்சம் தரவேண்டும் என்று தோன்று கிறதல்லவா?

"ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று: கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று.'

ஒருவர் இறந்து போனால் அதற்காக இரங்கிப் பாடும் பாடலைக் கையறுநிலை என்பார்கள், அது புறத்துறையில் ஒன்று. புறநானூற்றின் பிற்பகுதியில் பல கையறுநிலைப் பாடல்கள் உள்ளன. துயரம் கப்பிக்கொண்ட உள்ளத் தைப் பிழிந்து பாட்டாக வடித்திருக்கிறார்களோ என்று தோன்றும்.

மாதிரிக்கு ஒன்று.

ஒல்லையூர்கிழான் மகன் பெருஞ்சாத்தன் என்ற வீரன், கொடையாளி, இறந்து போனான். குடவாயில் ரேத்தனார் பாடுகிறார். அவன் ஊருக்குப் போகிற வ்ழியில் இந்தச் செய்தி புலவருக்குத் தெரிந்த்து வழியில் ஒரு முல்லைக்கொடி. அதைப் பார்த்துத் தம் துயரக் குரலை வடிக்கிறார் புலவர்.

'ஏ முல்லையே! நீ இன்னுமா மலர்கிறாய்? எதற்காக மலர்கிறாய்? வீரம் நன்றாக வெளிப்படும்படி வீரர்களை வென்ற வலிய வேலையுடைய சாத்தன் இறந்த பிறகும் உனக்குப் பூக்கத் தோன்றுகிறதா? முன்பெல்லாம். நீ கொத்துக் கொத்தாகப் பூத்தபோது சாத்தனைப் பார்க்க எல்லோரும் வருவார்கள். இளைய வீரர்கள் ஒரு