பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 தமிழ் நூல் அறிமுகம்

கொத்தைப் பறித்துத் தலையிலே சூடிக்கொள்வார்கள். வளையை அணிந்த பெண்கள் மலர்களைப் பறித்தது. சூடிச் செல்வார்கள். நல்ல யாழை எடுத்து வரும் பாணன், மேலே இருக்கும் பூங்கொத்தை அந்த யாழின் வளைந்த கோட்டினாலே மெல்ல வளைத்துப் பூவைப் பறித்து அணிந்துகொள்வான்; அவனுடன் வரும் பாட்டுக்காரியும், புனைந்து கொள்வாள்; இப்போது யார் உன்னைத் சீண்டுவார்கள்? அப்படி இருக்க இன்னும் நீ பூக்கி றாயோ?” என்று கேட்கிறார்

இளையோர் சூடார்; வளையோர் கொய்யார்; கல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் - பாணன் சூடான்; பாடினி அணியாள்; ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் காட்டே."

(இளையோர்- இளைய மைந்தர்; வளையோர்வளையை அணிந்த இளம் பெண்கள்; மருப்பு-யாழின் கோடு; பாடினி-பாண னுடைய மனைவி; பாட்டுப் பாடு கிறவள்; ஆடவர்க் கடந்த-வீரர்களை வென்ற

அவர் தம் அவல உணர்ச்சியைக் கொட்டிப் பாடிய்" பாட்டு இது. இதை அந்த முல்லை கேட்டிருக்காது. நாம் கேட்கிறோம்.