பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. நாலடியார்

'பழகு தமிழ்ச் சொல் அருமை நாலிரண்டில்' என்ற பழம் பாட்டும், 'நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி' என்ற பழமொழியும் நாலடியார், திருக்குறள் என்ற இரண்டு நூல்களும் தமிழ்நாட்டில் சிறப்புற்று. வழங்கியதைத் தெரிவிக்கின்றன. பதினெண் கீழ்க் கணக்கு என்ற தொகுதியில் உள்ள நூல்களில் உலகம் அறிந்ததாக விளங்குவது திருக்குறள். அதற்கு அடுத்த படி சிறந்து நிற்பது நாலடியார் திருக்குறளின் மதிப்பை" அதன் பெயரில் உள்ள திரு என்ற அடையே காட்டும். அப்படியே மதிப்புடைய மக்களுக்குக் கொடுக்கும் ஆர் விகுதியைப் பெற்று, காடிையார் என்று வழங்குவதனால் இந்த நூலுக்குத் தமிழ் நாட்டில் உள்ள மதிப்புப் புலனாகும். x

நான்கு அடிகளால் அமைந்த வெண்பாக்கள் நானூறு அமைந்த நீதி நூல் நாலடியார் தனியே கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்றும் இருக்கிறது. இதற்கு நாலடி நானூறு, வேளாண் வேதம் என்ற பெயர்களும் வழங்கும். நாலடி உள்ள பாடல்கள் அமைந்த பிற நூல்கள் இருந்தும், இதில் உள்ள பாடல்களின் சிறப்பால் அந்த அடியின சுணக்கைக் கொண்டே நாலடியார் என்ற. பெயர் அமைந்தது. -