பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"144 தமிழ் நூல் அறிமுகம்

இந்த நூல் தோன்றியதற்குரிய கதை ஒன்று வழங்கி வருகிறது.

தமிழ் நாட்டில் வேறு இடங்களில் பஞ்சம் உண்டான தால் அங்கங்கே இருந்த எண்ணாயிரம் சைன முனிவர்கள் மதுரைக்கு வந்து வாழ்ந்தார்கள். பாண்டிய மன்னன் அவர்களுக்கு வேண்டிய நலங்களைச் செய்து வந்தான். சில காலம் சென்ற பிறகு, பஞ்சம் நீங்கிப் பழையபடி பிறபகுதிகள் வளம் பெற்றதனால் முனிவர்கள் தம் தம் இடங்களுக்குப் போக விரும்பினார்கள். பாண்டியனுக்கு அவர்களை அனுப்ப மனம் இல்லை. என்றாலும் ஒரு நாள் அவர்கள் யாவரும் ஒவ்வொரு வெண்பாவைப் பாடி தம் ஆசனத்தின் கீழ் வைத்து விட்டுப் பாண்டியனிடம் சொல்லாமல் புறப்பட்டுப் போய்விட்டார்கள்.

அவர்கள் அவ்வாறு போனதை அறிந்து கோபம் கொண்ட பாண்டிய மன்னன் அவர்கள் ஆசனத்தின் கீழ்ப் பாடல்கள் எழுதியிருந்த ஒலைகளைக் கண்டான். கோபத்தால் அவற்றையெல்லாம் சேர்த்து வையை யாற்றில் எறியும்படி சொல்லி விட்டான்.

அவ்வாறு எறிந்த எண்ணாயிரம் ஏடுகளில் நானூறு ஏடுகள் நீரை எதிர்த்து வந்தனவாம். அவைசிறப்பானவை என்று அறிந்த அரசன் அவற்றைத் தொகுத்துப் பாது காத்துப் பரவச் செய்தானாம். .

"எண் பெருங் குன்றத்து

எண்ணா யிரம்இருடி பண்பொருங்தப் பாடிய பாாானூறும் என்று ஒரு பழம் பாடல் இந்தச் செய்தியைத் தெரி விக்கிறது. . -