பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. நாலடியார் 145

கதை எவ்வாறாயினும் இந்த நூல் ஒருவரால் பாடப் பெற்றது அன்று எனவும், பல சைன முனிவர் பாடிப் பிறகு தொகுக்கப் பெற்றது என்றும் கொள்ளலாம்.

நற்றினை நானுாறு அகநானூறு, புறநானூறு என்று நானூறு செய்யுட்களையுடைய நூல்கள் இருப்பது போல, இந்த நூலைத் தொகுத்தவர்களும் சில பாடல்களை இயற்றிச் சேர்த்து நானுாறாக்கியிருக்கலாம்.

நாலடியாரில் இர ண் டு பாடல்களில் பெரு முத்தரையர் என்ற அரசர்களின் பெயர் வருகிறது. அக்குலத்தினர் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். ஆகவே இந்த நூல் அதற்குப் பின்பே தோன்றியிருக்க வேண்டும். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம் பந்தர் சைனரோடு வாதம் செய்து தாம் எழுதிய ஏடு வையையால எதிர் ஏறிச் செல்லச் செய்தார். அந்த வரலாற்றைப் போலச் சைனர் பாடல்களுக்கும் ஒரு வரலாறு வேண்டுமென்ற எண்ணத்தால், இந்தப் பாடல்கள் வையையில் எதிர் நீச்சல் போட்டன என்ற கதை எழுந்திருக்கலாம்.

திருக்குறளில் உள்ளவற்றைப் போல இதிலும் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று மூன்று பால்களும் ஒவ்வொரு பாலிலும் இயல்களும் அதிகாரங்களும் இருக்கின்றன. இவற்றைப் பதுமனார் என்பவர் பிரித்து அமைத்தார் என்று தெரிகிறது. இந்த அமைப்புத் திருக்குறளில் இருப்பது போலச் சிறப்பாக இல்லை. அதிகாரத் தலைப்புக்கும் பாட்டின்பொருளுக்கும் நெருங்கிய தொடர்பு இல்லாத இடங்கள் பல உண்டு. பதுமனார், தருமர் பெயர் தெரியாத வேறு ஒருவர் எழுதிய பழைய உரைகள் இந்த நூலுக்கு உள்ளன.