பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தமிழ் நூல் அறிமுகம்

சைனர்கள் துறவறத்தையே சிறப்பாகப் பாராட்டு கிறவர்களாதலால் இந்த நூலில் முதலில் துறவற இயலும் அதன் பின்பே இல்லற இயலும் அமைந்திருக் கின்றன. துறவற இயலில் முதலில் செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை என்னும் அதிகாரங்கள் உள்ளன.

பொருட்பாலில் அ ர ச னு க் குரிய பண்புகளாகிய சிலவற்றைப் பற்றிய அதிகாரங்கள் வருகின்றனவே அன்றி, அரசியல், அமைச்சியில் முதலிய அரசோடு தொடர்புடைய சிறப்பான கருத்துக்களைச் சொல்லும் பகுதிகள் இல்லை. காமத்துப் பால் முப்பதே பாடல்களில் முடிவு பெறுகிறது. அவற்றிலும் முதல் பத்துப்பாடல்கள் மொது மகளிரைப் பற்றியவை.

நாலடியாரில் உள்ள கருத்துகள் சிறந்தவை. நல்ல உதாரணங்களுடன் சொல்லப்பட்டவை. நாம் அறிந்த பலவற்றை உவமைகளாகக் காட்டி நீதிகளைத் தெளி வாகச் சொல்லும் பாங்கை இந்நூலிலே காணலாம்.

செல்வம் நிலையாமை என்ற முதல் அதிகாரத்தில், நம் வாழ் நாள் சுருங்கிக் கொண்டே வருவதனால் விரைவில் அறம் செய்ய வேண்டும்” என்ற கருத்தை ஒரு பாடல் சொல்கிறது. . -

அங்கே, யமன் உங்கள் வாழ் நாளை அளக்கிறான். குரியனையே படியாகக் கொண்டு அளந்து அளந்து நம் நாளை உண்டு விடுகிறான்' என்று நயமாகச்சொல்கிறார் சைன முனிவர். . .

தோற்றம்சால் ஞாயிறு காழிய வைகலும் கூற்றம் அளந்துதும் கான் உண்ணும்:-ஆற்ற அறம்செய்து அருள்உடையீர் ஆகுமின்; யாரும் பிறந்தும் பிறவாதார் இல், ! .