பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. நாலடியார் 147

இளமை நிலையாமையில் ஒரு பாட்டு :

'இப்போது நாம் வயசில் இளையவர்களாக இருக் இறோம். நல்ல புண்ணியச் செயல்களை இப்போதே ஏன் செய்ய வேண்டும்? வயசான பிறகு செய்து கொள்ள லாமே? என்று எண்ணக்கூடாது. கையில் பொருள் இருக்கும் போதே அதை மூடி வைத்துக் கொள்ளாமல் தர்மம் செய்து விடவேண்டும்.

இந்த நீதியைச் சொல் தும் போது ஒர் உவமையைப் பாட்டுச் சொல்லுகிறது. நீ இளமையுடன் இருக்கும் போது சாக மாட்டாய் என்பது என்ன உறுதி? முதியவர்களே இறந்து போவார்கள் என்ற சட்டம் உண்டா என்ற கேள்வி பாட்டில் இல்லை. ஆனால் அந்தக் கருத்தையே உவமை மூலமாகத் தெரிவித்து விடுகிறது.

பெரிய காற்று அடிக்கிறது. மரத்தில் முற்றியிருந்த பழம் விழாமல் இருக்கவும் காய் உதிர்வதுண்டே?” என்று சொல்கிறது பாட்டு.

'மற்றுஅறிவாம் கல்வினை யாம் இளையம் என்னாது கைத்து உண்டாம் போழ்தே கரவாது அறம்சிெயமின்

முற்றி இருந்த கனி ஒழியத் தீவளியால் . கற்காய் உதிர்தலும் உண்டு.”

(பிறகு நல்ல செயல்களைச் செய்வதைப் பார்த்துக் கொள்ளலாம். இப்போது நாம் இளைய வயசுடையோம் என்று எண்ணாமல், கையில் பொருள் இருக்கும் போதே மறைக்காமல் தர்மத்தைச் செய்யுங்கள். முற்றியுள்ள பழங்கள் உதிராமல் மரத்தில் இருக்கவும், கொடுங் காற்றால் நல்ல காய்கள் உதிர்வதும் உண்டு.)

நீங்கள் சின்ன வயசிலே ச்ெத்துப் போனாலும், போகலாம்' என்று அமங்கலமாகச் சொல்லாமல் ஓர்