பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 தமிழ் நூல் அறிமுகம்

உவமையை நாகரிகமாகச் சொல்லிக் கருத்தைப் புலப்பட வைக்கிறார் முனிவர்.

வினைகள் தாமே தமக்குரிய பயனை விளைவிக்கும். என்பது சைனர் கருத்து. வினை ஜடமாதலின் அதன் பயனை ஊட்டுவிக்கும் ஒருவன் இருந்தாலன்றி அதுவே ஊட்டாது என்று மற்றச் சமயத்தார் அதை மறுப்பர். வினை தானே பயனை ஊட்டும் என்ற கருத்தை நாலடி யாரில் ஒரு பாட்டுச் சொல்கிறது. பல பசுமாடுகள் கூடி யிருக்கும் மந்ஆையிலே ஒரு கன்றுக் குட்டியை விட்டால் அது தன் தாய்ப் பசுவைத் தேடி அடையும் ஆற்றலைப் பெற்றிருக்கும். அதுபோல அவரவர் செய்த வினை பிறகு, வரும் பிறப்பில் அவரவரைச் சார்ந்து பயனைத் தந்து விடும்’ என்பது அந்தப் பாட்டின் கருத்து.

புலால் உண்ணக்கூடாது என்பதை வற்புறுத்துவது. சைன சமயம், அதை ஆற்றலுள்ள ஓர் உவமையால் ஒரு பாட்டுச் சொல்கிறது. -

சநாம் காணும் சுடுகாடு துக்கத்தை அனுபவித்துத் துறவை மேற்கொள்ளாத மனிதர்களின் பிணத்தைக் கொண்டது. அறிவில்லாதவர்களின் வயிறோ ஆடு முதலிய விலங்குகளுக்கும் கோழி முதலிய பறவை களுக்கும் உரிய சுடுகாடு x -

"துக்கத்துள் தூங்கித் துறவின்கண் சேர்கலா மக்கட் பிணத்த சுடுகாடு-தொக்க . விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே. புலம்கெட்ட புல்லறிவாளர் வயிறு." (புலம் கெட்ட-அறிவு கெட்ட 'ஒருவன் நன்றாகப் படிக்கவேண்டும். ஆனால் எதைப் படிப்பது? கல்விக்கு எல்லையே இல்லை. எல்லா