பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. நாலடியார் 149

வற்றையும் கற்று விடலாம் என்றாலோ, நம் வாழ் நாள் ஒரு குறுகிய எல்லைக்குள் அடங்கியது. ஆதலால் தெளி வாக ஆராய்ந்து எவற்றைக் கற்றால் நம் வாழ்க்கைக்குப் பொருந்துமோ, அவற்றைக் கற்க வேண்டும். பால் வேறு நீர் வேறு பிரித்துப் பாலை உண்ணும் அன்னம் போல, ஆராய்ந்து கற்க வேண்டும்' என்று ஒரு பாட்டுச் சொல் இறது. மலை மலையாக நூல்கள் வெளியாகும் இந்தக் காலத்தில் இந்த நீதி எவ்வளவு பொருத்தமாக இருக் கிறது!

மகாத்மா காந்தி தம் முன்பு மூன்று சீனக்குரங்குப் பொம்மைகளை வைத்திருப்பார். ஒன்று காதைப் பொத்திக் கொண்டிருக்கும். ஒன்று கண்ணைப் பொத்திக் கொண்டிருக்கும். மற்றொன்று வாயைப் பொத்திக் கொண்டிருக்கும். கெட்டதைக் கேட்க மாட்டேன் என்று காதைப் பொத்தியும், கெட்டதைப் பார்க்க மாட்டேன் என்று கண்ணைப் பொத்தியும், கெட்டதைப் பேச மாட்டேன் என்று வாயைப் பொத்தியும் அவை காட்டு கின்றனவாம்.

நாலடியார் வேறு வகையில் அந்த மூன்று உறுப்புக் களையும் பொத்திக் கொள்ள வேண்டும் என்பதை ஒரு பாட்டில் சொல்கிறது. பிறருடைய இரகசியத்தின் விஷ யத்தில் காது செவிடாகவும், அயலாருடைய மனைவி விஷ யத்தில் கண் குருடாகவும், பிறர் இல்லாதபோது அவரைப் பற்றிக் கோள் சொல்லும் திறத்தில் வாய் ஊமை யாகவும் ஒருவன் இருந்து அந்த ஒழுக்கத்தில் நிலையாக நிற்பானானால் அவனுக்குப் போய் நீ இதைச் செய், அதைச் செய்யென்று சிறிதும் அறத்தைக் கூற வேண்டர்ம்' என்பது அப்பாட்டின் பொருள்.

பிறர்மறை யின்கண் செவிடாய்த் திறன் அறிந்து

ஏதிலார் இற்கண். குருட்னாய்த் தீய த-10