பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 தமிழ் நூல் அறிமுகம்

புறங்கூற்றின் மூங்கையாய் நிற்பானேல் யாதும் அறம்கூற வேண்டா அவற்கு.'

(மறை-இரகசியம். திறன்-நல்ல பண்பு. ஏதிலார் கண்-இற் அயலார் மனைவியின் திறத்தில். புறங்கூற்று. கோள் சொல்லுதல். மூங்கை-ஊமை.)

நண்பர்களில் மூன்று வகையினர் உண்டாம். கமுக மர நண்பர், தென்ன மர நண்பர், பன மர நண்பர் என்று பெயர் வைக்கிறார் முனிவர் எப்போதுமே உதவிபண்ணிக் கொண்டே இருந்தால் நம்மை நண்பரென்று சொல்விப் பாராட்டும் பேர் வழிகள் இருக்கிறார்கள். அடிக்கடி தண்ணிர் விட்டுப் பாதுகாக்கும் பாக்கு மரத்தைப் போன்றவர்கள் அவர்கள். முதலில் பழகிய போது சில காலம் உதவி புரிந்து, பிறகு எப்போதாவது உதவி செய்ப வர்களிடம் அன்பு பூணும் நண்பர்கள் இரண்டாந்தரம். முதலில் தண்ணிர் விட்டு வளர்த்துப் பிறகு எப்போ தேனும் தண்ணீர் விட்டால் போதும், தென்னை மரம் வளர, அதைப் போன்றவர்கள் அவர்கள். பனமரம் ஆரம் பத்தில் கொஞ்சம் தண்ணிர் விட்டால் போதும். அது தானே வளரும். அது போல எப்போதோ செய்தஉதவியை நினைத்து வாழ்நாள் முழுதும் நண்பு காட்டும் உத்தமர் கள் இருப்பார்கள். -

இந்த மூன்று வகை நண்பர்களை அந்தப் பழங். காலத்தில் சைன முனிவர் பார்த்திருக்கிறார். இந்தக் காலத்தில் நாமும் பார்க்கிறோமே! இந்த உண்மை காலத்தால் மாறாதது அல்லவா? - . . .

மிகச் சுருக்கமாக உயர்ந்த நீதிகளைச் சொல்லும் சத்தான தொடர்கள் பல நாலடியாரில் குவிந்து கிடக் கின்றன. - + , . . . . . . -