பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. நான்மணிக் கடிகை

"துன்பப்பட வேண்டுமா? அதற்கு வழி சொல் கிறேன்' என்கிறார் புலவர். யாராவது துன்பம் அடைய வழி சொல்வார்களோ? எது ச்ெய்யக் கூடாது என்பதைத் தெரிவிக்கச் சமற்காரமாக அப்படிச் சொல்கிறார். இது செய்தால் துன்பம் உண்டாகும் என்பதையே, உனக்குத் துன்பம் வேண்டுமென்ற விருப்பம் இருந்தால் இதைச் செய்' என்கிறார். -

இன்னாமை வேண்டின் இரவுஎழுக'

"துன்பம் வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கையில் கப்பரையை எடுத்துக் கொண்டு புறப்படு’ என்கிறார். இரப்பவருக்கு எங்கே போனாலும் துன்பமே காத்திருக்கும் என்ற கருத்தை இப்படி வேறு ஒரு வகையில் எடுத்துச் சொல்கிறார். அடுத்தபடி சிலவற்றை நேராகவே சொல்லி விடுகிறார். இந்த உலகத்தில் நீ. நிலைபெற வேண்டுமா? புகழை உண்டாக்கி அதை நிறுவு. உன்னோடு மறுமை உலகத்துக்கும் வருவது ஏதாவது வேண்டுமா? தருமம் செய். எந்தக் காரியத்திலும் வெற்றி வேண்டுமா? சினத்தை அடியோடு விட்டுவிடு' என்கிறார். ஒரு வெண்பாவில் இப்படி நான்கு நீதிகளைச் சொல் கிறார். . o

"இன்னாமை வேண்டின் இரவெழுக; இங்கிலத்தில் மன்னுதல் வேண்டின் இசைகடுக;-தன்னொடு