பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. நான்மணிக் கடிகை iš 3

செல்வது வேண்டின் அறம்செய்க, வெல்வது வேண்டின் வெகுளி விடல்."

(இன்னரழை துன்பம். மன்னுதல் நிலைபெறுதல் இசை - புகழ். விடல் - விடுக.)

இந்தப் பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்றாகிய கான்மணிக் கடிகையில் வருகிறது. இப்படியே ஒவ்வொரு பாட்டிலும் நான்கு நான்கு கருத்துக்கள் மணித்துண்டுகள் போல அமைந்திருப்பதனால்தான் இதற்கு அந்தப் பெயர் வந்தது. கடிகை - துண்டு.

இந்த நூலை இயற்றியவர் விளம்பி நாகனார் என்பவர். இந்த நூலில் கடவுள் வாழ்த்தாக இரண்டு பாக்களில் திருமாலைத் துதித்திருக்கிறார் இப்புலவர். அதனால் இவர் திருமாலிடம் அன்புடையவர் என்று தெரியவரு கிறது. கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் இரண்டு, கருத் துக்களைச் சொல்லும் செய்யுட்கள் நூற்றொன்று - ஆக 103 பாடல்களை உடையது இந்த நூல். மூன்று செய் யுட்கள் நாலடிக்குமேல் வந்த பஃறொடை வெண்பாக்கள்: மற்றவை யாவும் நாலடி வெண்பாக்கள்.

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத பல நீதிகளை யும், வேறு சில கருத்துக்களையும் சொல்லும் இந்நூலில், ஒவ்வொரு பாட்டும் நான்கு கருத்துக்களை வெளியிடுகிற தென்று சொன்னேன். கடவுள் வாழ்த்தில் கூட நாலு செய்திகளையே சொல்கிறார்.

'திருமாலுடைய முகத்தை ஒத்திருக்கும் சந்திரன்; அவனுடைய சக்கரத்தைப் போல இருக்கும் சூரியன்: அவன் கண்ணைப் போல இருப்பது தாமரை மலர்: காயாம்பூ அவனுடைய நிறத்தை ஒக்கும்' என்று முதற் பாட்டில் சொல்கிறார். . W