பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 தமிழ் நூல் அறிமுகம்

'மதிமன்னும் மாயவன் வாள்முகம் ஒக்கும்;

கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்;

முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்

எதிர்மலர் மற்றுஅவன் கண்ஒக்கும்; பூவைப்

புதுமலர் ஒக்கும் கிறம்,'

(மதி - சந்திரன். வாள் - ஒளி, கதிர்-கிரணம்.பழனம். மருத நிலம். எதிர் மலர் - தோன்றும் பூ பூவை - காயாம்பூ.1

தூக்கம் இல்லாமல் பலபேர் தொல்லைப்படு கிறார்கள் முக்கியமாக நான்கு வகையான பேர்வழி களுக்குத் தூக்கம் வருவதில்லை. பிறர் பொருளைத் திருட வேண்டும் என்று ஒருவன் நினைக்கிறான். திருடுவதற்கு இராத்திரி தானே சரியான வேளை? அப்போதுதான் திருடன் தன் தொழிலைச் செய்கிறான். எல்லாரும் துயிலுகின்ற வேளையிலே அவன் உறங்காமல் இருக் கிறான்; அவன் தூங்காத பேர்வழிகளில் முதலில் வரு கிறவன். - - -

காதலியைப் பிரிந்து வருந்துகிறான் காதலன். இரவில் எப்படித் தூக்கம் வரும்? அவன் மனம் அவளையே. நினைந்து கொண்டிருக்கும். இரவு நேரம் அவனுக்கு நீண்டுகொண்டே இருக்கும். தூங்காதவர்களில் அவன் இரண்டாவது பேர்வழி. -

எப்படியாவது பணம் சம்பாதித்து முன்னுக்கு வர வேண்டும் என்று முயற்சியோடிருப்பவனும் தூங்கமாட் டான் எப்படி எப்படிப் பொருளை ஈட்டலாம் என்று இராவெல்லாம் எண்ணிக்கொண்டே இருப்பான்.

பணம் ஈட்டினவனுக்கும் தூக்கம் வராது; அதை எப்படிக் காப்பாற்றுவது என்பதையே நினைத்துக்கொண் டிருப்பான். பணத்தைத் திருடன் கொண்டு போய் விடுவானே என்று அஞ்சுவான். - - -