பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. நான்மணிக் கடிகை 155

தூங்காமல் இருக்கிறவர்கள் இன்னும் பலர் உண்டு. என்றாலும் நான்கு பேரை முக்கியமாக எடுத்துச் சொல் கிறார் விளம்பி நாகனார். -:

"கள்வம் என் பார்க்குத் துயில் இல்லை; காதலிமாட்டு

உள்ளம்வைப் பார்க்கும் துயில் இல்லை; ஒண்பொருள் செய்வம்என் பார்க்கும் துயில்இல்லை; அப்பொருள் காப்பார்க்கும் இல்லை துயில்."

[கள் வம் - திருடுவோம். பொருள் செய்வம் - செல்வத் தைச் சம்பாதிப்போம்.) -

எது எது பாழ் என்பதைச் சொல்கிறார்.ஒரு பாட்டில். "வீட்டில் மனைவி இல்லாவிட்டால் அந்த வீடு பாழ். நாம் போகிற திசையில் நமக்கு வேண்டிய நண்பர்கள் இருக்க வேண்டும்; அப்போதுதான் போன இடத்தில் காரியத்தைச் சாதித்துக்கொள்ள முடியும்; அப்படி யாரும் இல்லாவிட்டால் போன காரியம் நிறைவேறுவது அரிது. நியாயம் வழங்குவதற்குப் பழங்காலத்தில் சபைகள் இருக்கும். அந்தச் சபைகளில் அறிவும் அநுபவமும் நிறைந்த முதியவர்கள் இருப்பார்கள். அவர்கள் நடு நிலையில் நின்று தீர்ப்பளிப்பார்கள். அத்தகைய முதியவர் கள் இல்லாவிட்டால் சபையினால் எந்தப் பயனும் விளையாது. மனிதன் சற்று அறிவைப் பெற வேண்டும் இந்த அழகிய உடம்பைப் பெற்றதற்கு அறிவு பெறுவதே சிறந்த நோக்கமாக இருக்கவேண்டும். கல்வியும் அறிவும் இல்லாதவன் மனித உடம்பை எடுத்ததனால் ஒரு பயனும் இல்லை. விலங்காகப் பிறந்திருக்கலாம். அது படிக்கிறதா? படிக்காதவன் பெற்ற மனித உடமபு பாழ்தான் இப்படி நாலு பாழை நான்மணிக் கடிகை சொல்கிறது.