பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#56 தமிழ் நூல் அறிமுகம்

'மனைக்குப்பாழ் வாள் நுதல் இன்மை, தான்செல்லும்

திசைக்குப்பாழ் கட்டோரை இன்மை; இருந்த அவைக்குப்பாழ் மூத்தோரை இன்மை; தனக்குப்பாழ் கற்று அறிவு இல்லா உடம்பு' .

{வாள்துதல்-பெண்; இங்கே மனைவி. இல்லாளே இல்லத்துக்குத் தலைவியாதலால் அவள் இல்லாவிட்டால் மனை பாழாம் என்றார்.) .

இன்னாருக்கு இன்னதைவிடச் சிறந்தது இல்லை என்று. சொல்கிறது ஒரு பாட்டு.

உறுப்புக்களில் கண்ணைவிடச் சிறந்தது எதுவும் இல்லை. ஒரு பெண்ணுக்கு எத்தனையோ உறவினர்கள் இருந்தாலும் கணவனைவிடச் சிறந்தவர் யாரும் இல்லை. நாம் ஈட்டும் பொருள்கள் எல்லாவற்றிலும் சிறந்தவர்கள் குழந்தைகள், தாயைவிடச் சிறந்த தெய்வம் இல்லை."

கண்ணிற் சிறந்த உறுப்புஇல்லை; கொண்டானின்

துன்னிய கேளிர் பிறர்இல்லை; மக்களின் - ஒண்மைய வாய்சான்ற பொருள் இல்லை; ஈன்றாளின் என்ன கடவுளும் இல்.”

1கொண்டான்-கணவன். து ன் னிய - பொருந்திய. கேளிர். உறவினர். ஒண்மை - விளக்கம். வாய் சான்றஉண்மை மிக்க. என்ன - எத்தகைய.]

திருக்குறளில், தம் பொருள் என்பதம் மக்கள்' என்று வருகிறது; அதை அடியொற்றியே மக்களின் ஒண்மைய வாய்சான்ற பொருள் இல்லை என்றார் இப்புலவர், .

பொதுவாக எல்லோருக்கும் தம்முடைய சொந்த ஊரில், சொந்த வீட்டில் இருந்தால்தான் எல்லாச் செளகரியங்களும் கிடைக்கும். வேறு ஊருக்குப் போனால்