பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. நான்மணிக் கடிகை 157

அவர்களுக்கும் பொருந்தியே இராது. எப்போதடா நாம் ஊருக்குப் போய் அக்கடா என்று படுப்போம்" என்று இருக்கும்.ஆனால் சில பேருக்கு எந்த ஊரானாலும் வசதிகள் கிடைக்கும்; செல்வாக்கு இருக்கும், சிங்கத் துக்குத் தன் காடு பிறன் காடு என்று இல்லை என்பார்கள். அதுபோல இந்த மனிதச் சிங்கங்களுக்குத் தம் ஊர் பிறர் ஊர் என்ற வேறுபாடு இல்லை. அவர்கள் எங்கே சென்றாலும் அங்குள்ளவர்கள் மதித்து நலம் செய்வார் கள். அவர்கள் யார்?

நல்லவர்கள் எந்த ஊருக்குப் போனாலும் மதிப்பை அடைவார்கள். நல்வழியிலே சென்ற தூயவர்களுக்கும் அப்படியே.

இந்த இரு வகையாரோடு இன்னும் இரண்டு வகை யினர் உண்டு. அவர்களுக்கும் தம் ஊர் என்ற வரையறை இல்லை. மட்டமான மக்களுக்கு, இழிகுணம் உடையவர் களுக்கு தம் ஊர் என்று ஒன்று இல்லையாம். நல்ல வருக்கும் நல்ல நெறியிலே செல்வோருக்கும் தம் ஊர் தான் என்ற கட்டுப்பாடு இல்லை; எங்கும் அவர்களுக்கு தன்மை கிடைக்கும். இழிகுணம் உடையவர்களுக்கும் தமக்கென்று ஊர் இல்லையாம். எந்த ஊருக்குப் போனா லும் அவர்களைத் துரத்தி விடுகிறார்கள் ஆகையால் நிலையாகச் சொல்லக்கூடிய ஊர் எதுவும் அவர்களுக்கு இல்லையாம்! எல்லா ஊர்களும் அவர்களுக்குச் சமமே. தம் கையில் நிறையப் பணம் உள்ளவர்கள் எங்கே போனாலும் வசதி செய்து கொள்ளலாம். அவர்களுக்கும் தம் ஊரில்தான் இருக்கவேண்டும் என்பதில்லை.

'கல்லார்க்கும் தம் ஊர்என்று ஊர் இல்லை; கன்னெறிச்

செல்வார்க்கும் தம் ஊர்என்று ஊர் இல்லை;-அல்லாக் கடைகட்கும் தம்ஊர்என்று ஊர்இல்லை; தம்கைத்து உடையார்க்கும் எவ்வூரும் ஊர்.' -