பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 தமிழ் நூல் அறிமுகம்

(அல்லா-நல்லவர் அல்லாத. கடைகட்கும்-குணத் தால் சடைப்பட்டவர்களுக்கும். கைத்து-கைப்பொருள்."

ஒன்றுக்கு ஒன்று உவமையாக வைத்து நான்கு பொருள்களைச் சொல்லும் முறையும் நான்மணிக் கடிகையில் இருக்கிறது. -

அசுணமா என்ற விலங்கு (பறவை என்றும் சொல் வார்கள்) யாழைக் கேட்டால் மகிழும்; கடிய ஓசையை எழுப்பும் பறையைக் கேட்டால் உயிரை விட்டுவிடும்; அதுபோல, மனத்தில் குறை உண்டானால் அறிவுடைய வர்கள் வாழமாட்டார்கள். காட்டில் மூங்கிலில் நெல் முதிர்ந்து உதிர்ந்தால் மூங்கில் வளராமல் பட்டுப் போய் விடும்; அதுபோலத் தனக்கு விரோதமான பழிச் சொல் உண்டானால் சான்றோர் உயிரை விடுவர்.

'பறைபட வாழா அசுணமா; உள்ளம்

குறைபட வாழார் உரவோர்;- கிறைவனத்து கெல்பட்ட கண்ணே வெதிர்சாம்; மாசுறச் சொல்பட்டால் சாவதாம் சால்பு.' .

(உரவோர்-அறிவுடையோர், வனம்-காடு, வெதிர்மூங்கில், சால்பு-சால்புடையோர்.1

ஒன்றனோடு ஒன்று தொடர்பு பட்டு வரும்படி நான்கு கருத்துக்களைச் சொல்வதும் இவ்வாசிரியர் வழக்கம். மனைக்கு விளக்கம் மடவாள்; மடவாள்; - -

தனக்குத் தகைசால் புதல்வர்;-மனக்குஇனிய காதல் புதல்வர்க்குக் கல்வியே, கல்விக்கும் ஒதில் புகழ்சால் உணர்வு." - (மடவாள்-பெண். தகை தகுதி, குணநலங்கள். மனக்கு-மனத்துக்கு உணர்வு-ஞானம்.1 .