பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. நான்மணிக் கடிகை 159

கள்ளியினிடையே அகில் பிறக்குமாம்; நிலத்துக்கு நெல்லும் கரும்பும் அணி செய்வன; குளத்துக்குத் தாமரை அழகு செய்யும்; பாம்பை மந்திரத்தால் கட்டுப் படுத்துவார்கள் யானை கொம்பினால் பிறருக்குத் துன்பத் தைத் தரும்; இரும்பை இரும்பால் பிளப்பார்கள்; நீர் இல்லாவிட்டால் நெய்தல் வாடும். இத்தகைய பல கருத் துக்களைத் தாம் சொல்லும் நான்கு என்ற எண்ணுக்குள் அடங்கும்படி சொல்கிறார் ஆசிரியர். ஆனால் அவை அங்கங்கே உவமைகளாக நின்று பொருளை விளக்கு கின்றன.

திருக்குறளில் உள்ள பல கருத்துக்களை இவ்வாசிரியர் சில இடங்களில் ஆளுகிறார்.

"கெட்டுஅறிக கேளிரான் ஆயபயன்' என்று இவ்வாசிரியர் கூறுவது,

'கேட்டினும் உண்டோர் உறுதி, கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல்'

என்ற குறளைப் பின்பற்றியது.

வான்கோக்கி வாழும் உலகெல்லாம்; மன்னவன்

கோல்நோக்கி வாழும் குடி' - என்ற திருக்குறளிலுள்ள சொல்லையும் பொருளையும்,

கோல்நோக்கி வாழும் குடிஎல்லாம்.வானத்

துளிநோக்கி வாழும் உலகம்'

என்று ஆள்கின்றார்.

இன்மையின் இன்னாதது இல்லை” என்ற இவ்வாசிரியர் கருத்து,