பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. இன்னா நாற்பது

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் நாற்பது என்து நான்கு நூல்கள் இருக்கின்றன. அவை இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது என்னும் நான்கு. ஒவ்வொரு நூலிலும் நாற்பது பாடல்கள் உள்ளன. முன் உள்ள நூல்கள் இரண்டும் நீதி நூல்கள். .

"இவை இன்னாமையைத் தருவன என்று ஒவ்வொரு பாட்டிலும் நான்கு இன்னாதவற்றை உணர்த்தும் நூல் இன்னா நாற்பது. கடவுள் வாழ்த்தோடு நாற்பத்தொரு பாடல்கள் இருக்கின்றன. கடவுள் வாழ்த்திலும் நான்கு

son

இன்னா வருகின்றன.

இந்நூலை இயற்றியவர் கபில தேவர். சங்க காலத்தில் இருந்த கபிலர் வேறு இந்தக் கபில் தேவர் வேறு. இந்த நூலுக்குப் பழைய உரை உண்டு.

ஒவ்வொரு பாட்டிலும் இன்னது. இன்னா என்று நான்கைக் கூறும் முறையில் நூலில் உள்ள 41 பாடல் களிலும் 164 இன்னா வருகின்றன. -

சிவபெருமான், முருகன், பலராமன், கண்ணன் என்ற நான்கு தெய்வங்களையும் சேர்த்துச் சொல்லுதல் ஒரு மரபு புறநானூற்றிலும் சிலப்பதிகாரத்திலும் இந்த