பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 தமிழ் நூல் அறிமுகம்

மரபைக் காணலாம். இந்த நூலின் ஆசிரியர் கடவுள வாழ்த்தில் அந்த நான்கு கடவுளரையும் குறிக்கிறார். அவர்களை வழிபடாதவர்க்குத் துன்பம் உண்டாகும் என்று சொல்கிறார்.

கமுக்கட் பகவன் அடிதொழா தார்க்குஇன்னா;

பொற்பனை வெள்ளையை உள்ளாது ஒழுகுஇன்னா; சக்கரத் தானை மறப்புஇன்னா; ஆங்குஇன்னா சத்தியான் தாள்தொழா தார்க்கு."

முக்கட் பகவன் என்றது சிவபெருமானை. பனைக் கொடியும் வெள்ளை நிறமும் உடையவர் பலராமர்; அவரை, பொற்பனை வெள்ளை' என்றார். ஒழுகுஒழுகுதல். சக்கரத்தான் என்றது சக்கரபாணியாகிய திருமாலை; இங்கே கண்ணனைக் கொள்ள வேண்டும். வேலுக்குச் சத்தி என்று ஒரு பெயர் உண்டு. அதை உடையவன் முருகன். இன்னா உண்டாகும் என்று, முதலிலும் இறுதியிலும் வரும் வாக்கியங்களில் ஒரு சொல் வருவித்துப் பொருள் செய்ய வேண்டும். r

இன்னது செய்தல் வேண்டும், இன்னது செய்தல் கூடாது என்று கூறுவது நீதி நூல். இன்னது செய்தால் தீங்கு உண்டாகும் என்ற பொருளில், இன்னவை இன்னா என்று இந்நூல் சொல்கிறது. விலக்க வேண்டியவற்றை இன்னா என்று கூறுவதோடு, செய்ய வேண்டியவற்றை, இதைச் செய்யாமல் இருத்தல் இன்னா என்று இரண்டு எதிர்மறைகளைச் சொல்லிப் புலப்படுத்துகிறார். இதன் ஆசிரியர். - -- . . .

"முத்த இடத்துப் பிணிஇன்னா' என்று சொன்னார். இது விலக்கியது.