பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. இன்னா நாற்பது - 163

குலத்தில் பிறந்தவன் கல்வி உடையவனாக இருக்க வேண்டும். இதை எதிர்மறை வடிவில் புலப்படுத்துகிறார்; குலத்தில் பிறந்தவன் கல்லாதிருத்தல் இன்னா என்று சொல்கிறார்.

"குலத்துப் பிறந்தவன் கல்லாமை இன்னா.'

அறம், பொருள், இன்பம் என்ற மூன்று உறுதிப் பொருள் பற்றிய நீதிகளும் இந்த நூலில் உள்ளன. ஈகை, நட்பு, மன்னர் இயல்பு, அந்தணர் இயல்பு, கல்வி பற்றிய கருத்துக்கள் பல இதில் வருகின்றன. - .

இன்ன இன்ன இடத்தில் உள்ள அழகு இன்னாதன என்று வெவ்வேறு இடங்களில் சொல்கிறார். அவர் கூறுவன : - --

(1) ஒட்டுறவு இல்லாத மனைவியின் அழகு இன்னா தது. (பந்தம் இல்லாத மனையின் வனப்பு இன்னா)

(2) தகப்பன் இல்லாத மகனுடைய அழகு பயனற் றது (தந்தை இல்லாத புதல்வன் அழகு இன்னா)

(3) மணம் இல்லாத மலரின் அழகு இனியது அன்று (நாற்றம் இலாத மலரின் அழகு இன்னா.)

(4) வள்ளல் தன்மை இல்லாதவர் அழகு வீண் (வண்மை இலாளர் வனப்பு இன்னா.)

- (5) ಈ6ir இல்லாதவன் அழகு பயனற்றது (கண்இல் ஒருவன் வனப்பு இன்னா.) .

(6) செல்வம் இல்லாதவன் அழகு மதிப்புப் பெறாது

(வளமை இலாளர் வனப்பு இன்னா.)

() அறிவில்லாதவன் அழகு பயனற்றது (இன்னா அழகுடையான் பேதை எனல் ) -